பள்ளியை நோக்கி....

Irshad Bin Jahaber Ali
0
என்னடா மச்சான்...........இப்பதான் ஸ்கூல் லீவ் விட்ட மாதிரி இருக்குது அதுக்குள்ள ஸ்கூல் ஆரம்பிக்கிராங்கலே............இவ்வாறு மாணவர்கள்,சிறுவர்கள் பலர் பேசிக்கொண்டு செல்வதை நாம் கேட்டிருப்போம்.இதற்க்கு காரணம்
நாளை நமதூர் உட்பட தமிழகம் முழுவதும் நாளை பள்ளிகள் திறக்கப்படுகின்றன.
மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ்களை ஒரே வாரத்தில் வழங்க உத்தரவிட்டுள்ளதால் புகைப்படம் எடுக்கும் பணியும் நாளையே தொடங்குகிறது.

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 20 ஆம் தேதி பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டது. கோடை விடுமுறையை கொண்டாட மாணவ, மாணவிகள் பெற்றோருடன் சொந்த ஊர்களுக்கும் சுற்றுலா தலங்களுக்கும் சென்றனர்.

ஜூன் 3 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கோடை வெயில் கொளுத்தியதாலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டதாலும் பள்ளிகள் திறப்பு 10 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. அதன்படி, தமிழகம் முழுவதும் பள்ளிகள் நாளை திறக்கப்படுகின்றன.

கோடை விடுமுறை காலத்தை பயன்படுத்தி, பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை பூர்த்தி செய்ய வேண்டும். வாகனங்களை சரியாக பராமரிக்க வேண்டும் என ஏற்கனவே பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. கடந்த ஒரு வாரமாக மாநிலம் முழுவதும் கல்வித்துறை அதிகாரிகளும் போக்குவரத்து அதிகாரிகளும் பள்ளிகளில் ஆய்வு நடத்தினர்.

சரியாக பராமரிக்கப்படாத வாகனங்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டது. மேலும் அடிப்படை வசதி மற்றும் அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் மூடப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பள்ளிகள் நாளை திறக்கப்படுவதையடுத்து அதற்கான முன்னேற்பாடுகளை கல்வித்துறை அதிகாரிகளும் ஆசிரியர்களும் செய்து வருகின்றனர்.

பள்ளிகள் திறந்த ஒரே வாரத்தில் மாணவ, மாணவிகளுக்கான இலவச பஸ் பாஸ், சீருடை, செருப்பு, புத்தகப்பை, உலக வரைபடம், பென்சில், ஜியாமென்ட்ரி பாக்ஸ் போன்ற பொருட்களை வினியோகிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே, இலவச பஸ் பாஸ்களுக்கான புகைப்படம் எடுக்கும் பணி, அந்தந்த பள்ளிகளில் நாளையே தொடங்குகிறது.

புகைப்படம் எடுத்த 24 மணி நேரத்துக்குள் சம்பந்தப்பட்ட மாணவ, மாணவிகளின் பஸ் பாஸ்களை, அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்களிடம் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளதால், புகைப்படம் எடுக்கும் பணியில் கான்ட்ராக்ட் ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

இலவச பாட புத்தகங்கள் ஏற்கனவே மாவட்ட வாரியாக அனுப்பி வைக்கப்பட்டு, அங்கிருந்து எல்லா பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டது. பெரும்பாலான பள்ளிகளில் மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டுவிட்டன. விடுபட்ட மாணவர்களுக்கு பள்ளி திறந்ததும் புத்தகங்கள் வழங்கப்படும்.

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)