எய்ட்ஸை குணப்படுத்த புதிய சிகிச்சை:2 நோயாளிகள் HIV இல் இருந்து மீண்டனர்

0
எலும்பு மஜ்ஜைகளை மாற்றுவதன் (Bone Marrow Transplant)மூலம் எச்.ஐ.வி. நோயினைக் குணப்படுத்த முடியும் என பாஸ்டன் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

எச்.ஐ.வி. நோயினால் பாதிக்கப்பட்ட இரண்டு அமெரிக்கர்கள் ரத்த புற்று நோயினாலும் பாதிக்கப்பட்டு இருந்தனர். இவர்கள் பாஸ்டனில் உள்ள பிரிகாம் மற்றும் பெண்கள் மருத்துவமனையில்

சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களுடைய புற்றுநோயினைக் குணப்படுத்துவதற்காக எலும்பு மஜ்ஜைகளை மாற்றி மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.

இந்த மாற்றத்திற்குப் பின்பு அவர்களுடைய உடலில் எச்.ஐ.வி. நோய்க்கிருமிகள் மறைந்தன. புதிய எலும்பு மஜ்ஜைகளில் உள்ள செல்கள் இவர்களது பழைய செல்களை மாற்றி விட்டதால், நோய்க் கிருமிகள் மறைந்துள்ளதாக மருத்துவர்கள் கண்டறிந்தனர்.
தற்போது நோயாளிகளில் ஒருவர் நான்கு மாதங்களாகவும், மற்றொருவர் ஏழு மாதங்களாகவும் மருந்துச் சாப்பிடாமல் இருந்தும் அவர்களுக்கு எச்.ஐ.வி. நோய்க்கிருமிகள் இருப்பதற்கான தடயங்கள் எதுவுமில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இத்தகவலினை மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற உலக எய்ட்ஸ் சொசைட்டி மாநாட்டில் மருத்துவர் டிமோதி ஹென்ரிச் தெரிவித்துள்ளார்.

எலும்பு மஜ்ஜை மாற்றுச் சிகிச்சைக்கான செலவு மிக அதிகமாக இருந்தாலும், எச்.ஐ.வி. நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதன் மூலம் சிகிச்சை அளிப்பது பற்றி ஆய்வுகள் நடைபெறும் எனத் தெரிகிறது. இந்த நோயினால் ஏறத்தாழ மூன்றரைக் கோடி மக்கள் உலகில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)