அதிராம்பட்டினம் மக்களில் எழுபது சதவீதம் பேர் முஸ்லீம்கள்.அவர்கள் இஸ்லாமிய ஓரிரைக் கொள்கையை கடைப்பிடித்து வாழ்கின்றனர்.அதிரையில் தெருவிற்க்குத் தெரு மசூதிகள் உள்ளன.அவற்றில் தொழுகை நேரம் வந்து விட்டால் பாங்கு ஊர் முழுவதும்ஒலிக்கும்.
வெள்ளிக்கிழமை வந்துவிட்டால் மக்கள் உற்ச்சாகமாக குளித்து நல்ல உடைகள் அனிந்து ஒன்றாக குத்பாவிற்க்கு சென்று தொழுவதும் பின்னர் உறவினர்கள் வீடுகளுக்கு சென்று வருவார்கள். அதிரையில் பிற ஊர்கள் போல் இல்லாமல் அரபு நாடுகள் போல் வெள்ளிக்கிழமை பள்ளி கல்லூரிகளுக்கு பொது விடுமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
அதிரை மக்களின் உடைக் கலாச்சாரதைப் பற்றிக் கூறவேண்டும் என்றால்,ஆண்கள் வெள்ளை லுங்கியும் சட்டையும் அணிவது வழக்கம்,மாணவர்கள் மற்றும் வேளைக்குச் செல்பவர்கள் மட்டும் பேண்டு சட்டை அனிவார்கள்.பெண்கள் முழு ஹிஜாபுடன்(முழு உடலையும் மறைத்தவாரு) அணிந்திருப்பார்கள்.
அதிரை மக்கள் பிற ஊர்களில் திருமண உறவுகளை வைத்துக் கொள்ளமாட்டார்கள்.
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது