
தற்போது இளையவர்கள் முதல் முதியவர்கள் வரை
அனைவரின் மத்தியிலும் மிகவும் பிரபலமாக இருக்கும் பர்கர், பிட்ஸா பட்டியலில் சிக்கன் நக்கட்ஸுக்கும் இடம் உண்டு.
சிறிய உருண்டைகள் போல காட்சியளிக்கும் இவை பலரின் ஃபேவரைட் உணவாகும். மிகுந்த சுவையுடன் இருக்கும் இந்த சிக்கன்
நக்கட்ஸ்சை அதே சுவையுடன்
வீட்டில் எவ்வாறு செய்வது என்று பார்ப்போமா.. சிறிய உருண்டைகள் போல காட்சியளிக்கும் இவை பலரின் ஃபேவரைட் உணவாகும். மிகுந்த சுவையுடன் இருக்கும் இந்த சிக்கன்
தேவையானவை
சிக்கன் - 1 கப்
மிளகுதூள் - 1 ஸ்பூன்
கரம் மசாலா - 1 ஸ்பூன்
பிரெட் தூள் - 1/2 கப்
சோள மாவு - 3 ஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவைகேற்ப
சிக்கனை நன்றாக சுத்தம் செய்து, அதனை மிளகு தூள், உப்பு, கரம் மசாலா ஆகியவற்றுடன் சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் சோள மாவு மற்றும் தண்ணீர் கலந்து மாவாக கரைத்துகொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் சோள மாவு மற்றும் தண்ணீர் கலந்து மாவாக கரைத்துகொள்ளவும்.

அரைத்த சிக்கன் விழுதை சிறிய உருண்டைகளாக்கி அதனை சோள
மாவில் நினைத்தப்பின்னர், பிரெட் தூளில் போட்டு சிறிது
நேரம் கழித்து நன்றாக காய்ந்த எண்ணெய்யில் பொரித்தெடுத்தால் சுவையாக சிக்கன்
நக்கட்ஸ் ரெடி.
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது