பலங்கள் தருவேன் பலனூறு !
பச்சை வண்ண இலைகளால்
பசுமை ஆழகினை அளித்திடுவேன் !
காய்ந்த இலைச் சுருகுகளால்
மண்ணை வளமாய் ஆக்கிடுவேன் !
கிளைகளில் பறவைகள் இளைப்பாறும்
கனிகளை புசித்துப் பசியாறும் !
நிழலைச் சுகமாய்க் கொண்டாடும்
உயிர்களை அனைத்து இன்புறுவேன் !
உணவுச் சங்கிலி என் துவக்கம்
பிராணவாயு என் உபயம் !
சுற்றுச்சூழல் நலம் காக்கும்
சுந்தர உயிர் நான் தானே !
விறகாய் எரிந்து பயன் தருவேன்
வீடு கட்டவும் மரமாவேன் !
மருந்துகள் பலவும் நான் தருவேன்
மரமென்றும், தருவென்றும் பெயர் கொண்டேன் !
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது