ஸ்மார்ட்போன் மூலம் பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் வசதி விரைவில் அறிமுகம்

0
adiraipirai.com/passport/android
பாஸ்போர்ட் தேவைப்படுபவர்கள் இனி ஸ்மார்ட்போன் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கான வசதி விரைவில் அறிமுகம் ஆகிறது.

இதுகுறித்து பாஸ்போர்ட் சேவா திட்டத்தின் இணை செயலாளர் மற்றும் தலைமை பாஸ்போர்ட் அதிகாரி முக்தேஷ் குமார் கூறியதாவது:
  

பாஸ்போர்ட்
தேவைப்படுபவர்கள் ஸ்மார்ட்போன் மூலம் விண்ணப்பிக்கும் வசதி விரைவில் வருகிறது. அதன்படி, ஸ்மார்ட்போன்களில் உள்ள எம்,பாஸ்போர்ட் சேவா அப்ளிகேஷனை பயன்படுத்தலாம். இதில் அப்ளிகேஷனில் சென்று விண்ணப்பதாரர்கள் தங்களுடைய விவரங்களை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். இந்த வசதி ஓரிரு மாதங்களில் அறிமுகமாகிவிடும்.

எம்,பாஸ்போர்ட் சேவா என்ற ஆன்ட்ராய்ட் அப்ளிகேஷனை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கடந்த மார்ச் மாதம் அறிமுகம் செய்தது. இந்த அப்ளிகேஷன் தேவைப்படுபவர்கள் www.passportindia.eov.in என்ற இணையதள முகவரிக்கு சென்று பதிவிறக்கம் செய்யலாம்.

கடந்த ஆண்டில் 74 லட்சம் பேருக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டது. இந்த ஆண்டில் அது 85 லட்சமாக உயரும் என்று எதிர்பார்க்கிறோம். இதில் 75 லட்சம் பாஸ்போர்ட்கள், இந்தியாவில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகங்கள் மூலமும், வெளிநாடுகளில் உள்ள தூதரகங்கள், துணைத் தூதரங்கள் மூலம் 11 முதல் 12 லட்சம் பாஸ்போர்ட்களும் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலத்திலேயே 37 லட்சம் பேருக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது.

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)