அதிரை நியாய விலை கடைகளில் அநியாயம், கட்டாயப்படுத்தி விற்கப்படும் அத்தியா(அநா)வசியப் பொருள்கள்

0
நமதூரில் இயங்கிவரும் பெரும்பாலான ரேசன் கடைகளில் அந்த கடை ஊழியர் சில்லைரை தராமல் வேறு ஏதாவது (தேயிலை,சோப்பு,ரவை) போன்ற பொருள்களை தருகின்றனர் என்றும் இவை அனைத்தும்
வாடிக்கையாளரிடம் கட்டாயமாக விற்கப்படுகின்றது என்றும் புகார் எழுந்துள்ளது.இதை வாங்க மறுப்பவர்களை மரியாதைக் குறைவாக அவர்கள் பேசுவதாக புகார் எழுந்துள்ளது. ஒருவர் நூறு ரூபாயை கொண்டு வந்து 50 ரூபாய்க்கு தேவையான பொருட்களை வாங்கினால் மீதம் உள்ள 50 ரூபாய்க்கு தாங்கள் விற்பனை செய்யும் பொருட்களை நுகர்வோருக்கு அவர்களின் விருப்பம் இல்லாமலே தந்து மீதம் உள்ள பணத்தை சரிகட்டி விடுகின்றனர்.மேலும் இவர்கள் இந்த அத்தி(நா)யாவசியப் பொருள்களை விற்பனை செய்வதற்க்கு எந்த விதமான அனுமதியையும் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மக்களே இது போன்ற புகார்கள்,செய்திகள் ஏதும் இருந்தால் அதிரை பிறையின் வாசர் பக்கத்தில் பதியுங்கள் அல்லது கால் அதிரை பிறையில் கொடுக்கப்பட்டுள்ள அலைப் பேசி எண்ணுக்கு அழைத்து எங்களிடம் தெரிவியுங்கள்.நாங்கள் மேலே பதியப்பட்டுள்ள செய்தியை போல் அதிரை பிறையில் உங்கள் புகாரை,செய்தியை வெளிபடுத்துவோம் (செய்தியளிப்பவரின் சுய முகவரி பாதுகாக்கப்படும்).

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)