செந்தமிழ் முதல் சென்னை தமிழ் வரை பல வகையான பேச்சு வழக்கங்ககள் தமிழில் உண்டு. உதாரணத்திற்க்கு மதுரை தமிழ், கோவை தமிழ், நெல்லை தமிழ், வேலூர் தமிழ், சென்னை தமிழ் போன்று ஒவ்வொரு மாவட்டத்திற்க்கும் ஒரு
வகையான பேச்சு வழக்கு உள்ளது இந்த வரிசையில் அதிரை தமிழும் ஒன்று. ஆமாங்க நம்ம ஊரு பேச்ச பத்தித் தான் நம்ம இப்போ பாக்க போறோம். நம்ம ஊர் பேச்சுக்கும் செந்தமிழ் பேச்சுக்கும் உள்ள வித்தியாசத்த பத்தி
டிக்ஸ்னரி (DICTIONARY) மாதிரி இனி வாரா வாரம் பாக்கப்போறோம்..
சரி மொதல்ல நம்ம ஊரு ஸ்பெஷல் ஈக்கிதுலேந்து ஆரம்பம்பிக்கலாம்
உலக பேச்சு-------------அதிரை பேச்சு
இருக்கிறது-------------ஈக்கிது
நினைத்தால்----------நெனச்சா
குழம்பு---------------------ஆனம்
ஆக கடைசி------------துன்யா கடைசி
சோப்பு---------------------சவுக்காரம்
நன்றாக உள்ளீர்களா-------------------சொகமா இருக்குரியலா
பிடித்து-----------------புடிச்சு
பழைய சோறு--------------நீச்சோறு
பார்த்தால்---------------பாத்தா
அண்ணன்---------------காக்கா

அழகிய ஆக்கம் நம்ம ஊரின் பேச்சை உலகம் அறிய செய்ததற்க்கு நன்றி, பதிவு தொடர வாழ்த்துக்கள்
ReplyDelete