அதிரையில் இரைச்சல் தரும் ஒலிப்பெருக்கிகள், எரிச்சல் அடையும் மக்கள்

0
அதிரையில் இன்று ஆயுத பூஜையை முன்னிட்டு இன்று அதிரை சேர்மன் வாடி ஆட்டோ ஒட்டுனர்களால் அந்த பகுதியில் ஒலிப்பெருக்கி மூலம் சினிமா பாட்டுகளை கடும் சப்தத்துடன் ஒலித்துக்கொண்டிருந்தது. இதனால்
அந்த பகுதி மட்டும் அல்லாது அந்த பகுதியின் அருகில் இருப்பவர்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியது. அருகில் வீடுகளில் வசிக்கும் மக்கள் மட்டுமல்லாது அந்த சாலையை கடந்து செல்லும் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் மிகுந்த அவதிப்பட்டனர். கடும் சத்ததால் பின்னால் வரும் வண்டி (HORN) ஹாரன் அடிக்கும் சத்தம் கூட முன்னால் செல்பவருக்கு கேட்கவில்லை, மேலும் இதனால் அந்த பகுதியில் ஒரு சாலை விபத்து நடந்திருக்கும், நல்ல வேளையாக தடுக்கப்பட்டது. இது போன்று அதிக சத்ததுடன் ஒலிக்கும் ஒலிப்பெருக்கிகளால் மக்களின் செவுயுரும் திறனில் குறைவு, மன உளைச்சல், மேலும் இந்த கருவி இதய நோயாளிகளுக்கு மிகப்பெரிய எதிரி என்று கூறலாம். இது போன்ற கருவிகளை தேவையின்றி பயன்படுத்துவதை அதிரை காவல் துறையினர் தடை செய்யவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)