அதிரையில் துவங்கியுள்ளது பருவமழைக் காலம்

0
அதிரையில் கடந்த மூன்று நாட்களாகவே மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. அதிரையில் இன்று அதிகாலையில் இருந்து சுமார் இரண்டு மணி நேரம் பெய்த மழையால் அதிரை சாலைகள் முழுவதும் ஆறு போல் மழை நீர்
ஓடிக்கொண்டிருக்கின்றது. 

அதிரையில் தீபாவளிக்காக பள்ளி, கல்லூரிகள் மூன்று நாட்கள் விடுமுறை விடப்பட்டிருந்த நிலையில் இன்றும் தொடர்ந்து பெய்து வரும் மழையால் மாணவர்கள் இன்றும் பள்ளிக்கு விடுமுறை விடுவார்களா! என எண்ணத் துவங்கி தொலைக்காட்சி செய்திகளை பார்த்த வண்ணமும் பள்ளிகளுக்கு தொலைப்பேசியில் தொடர்புகொண்டு விடுமுறை குறித்து விசாரித்த வாரும் உள்ளனர். 

மேலும் இந்த தொடர் மழையால் அதிரையில் நீர் நிலைகள் நிறம்பத் துவங்கியுள்ளன. பல வாரங்களாக அதிரையில் வெயில் வாட்டி வந்த நிலையில் நமதூரில் சில தினங்களாக பெய்து வரும் மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.









Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)