
ஜனவரி :
- ஜனவரி 4: கடற்கரை தெரு அமீரக அமைப்பின் செயற்குழு கூட்டம் நடைபட்டது .
- ஜனவரி 6: தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்றம் கழகம் அதிரை கிளை சார்பாக மாபெரும் எழுச்சி பொது கூட்டம் நடைபெற்றது
- ஜனவரி 6: அதிரையை அதிரவைத்த ஓட்டப்பந்தய போட்டி இதை அதிரை ஸ்போர்ட்ஸ் கிளப் குழுவினர் ஏற்பாடு செய்தனர் .
- ஜனவரி 15: அதிரை நகர இந்தியன் யுனியன் முஸ்லிம் லீக் சார்பில் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் தக்வா பள்ளி அருகில் மர்ஹூம் N.A.ஜெக்கரியா நினைவரங்கத்தில் நடைபெற்றது.
- ஜனவரி 20: அதிரையில் லயன்ஸ் கிளப் விருது வழங்கும் நிகழ்ச்சி லாவண்யா மஹாலில் நடைபெற்றது.
- ஜனவரி 22: அதிரையில் விபத்து அறிவிப்பு பலகை! அதிரை ரயில் வே கேட் ECR அருகில் அதிரை லியோ சங்கத்தின் சார்பாக மாற்று வழி அறிவிப்பு பலகை நிறுவப்பட்டுள்ளது.
- ஜனவரி 25: இமாம் ஷாஃபி(ரஹ்)மெட்ரிக் பள்ளி 39 வது ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது.
- ஜனவரி 26: அதிரையில் குடியரசு தின விழா கோலாகலம் கொண்டபட்டது . நமதூரில் உள்ள பள்ளி,கல்லூரி மற்றும் முக்கிய இடங்களில் நமது நாட்டின் தேசிய கொடியேற்றி பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது.
- ஜனவரி 28: இமாம் ஷாஃபி மேல்நிலை பள்ளியின் 39-வது ஆண்டு விழா நடைப்பெற்றது.
- ஜனவரி 31:அதிரை SDPI கட்சி சார்பில் ஷஹீத் பழனிபாபா நினைவு அரசியல் எழுச்சி பொதுக்கூட்டம் தக்வா பள்ளி அருகில் ஷஹீத் பழனிபாபா அரங்கில் நடைப்பெற்றது.
- பிப்ரவரி :
பிப்ரவரி 1: அதிரை ஈஸ்டன் ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் 5 ஆம் ஆண்டு மின்னொளி கைப்பந்து போட்டி நடைபெற்றது.
பிப்ரவரி 5: அதிரை சகோதரர்களின் புதிய ஆம்னி பேருந்து அறிமுகம் செய்யபட்டது. இந்த பேருந்து சென்னை to அதிரை மற்றும் அதிரை to சென்னை பேருந்து சேவை தொடங்கப்படும் .இதன் பெயர் " ரஹ்மத்ரோடு வேஸ்" என்பது குறிபிடபட்டது.
பிப்ரவரி 9: காதிர் முகைதீன் கல்லூரியில் சுற்றுச்சூழல் குறித்த பயிலரங்கம் நடைபெற்றது.
பிப்ரவரி 10: இந்திய தவ்ஹீத் ஜமாத் சார்பில் நீதி கேட்டு பொதுக்கூட்டம் தக்வா பள்ளி அருகில் நடைப்பெற்றது.
பிப்ரவரி 20: காதிர் முகைதீன் கல்லூரியில் புதுபிக்கப்பட்ட கல்லூரி கலையரங்கத்தின் திறப்பு விழா நடைப்பெற்றது.
பிப்ரவரி 28: அதிரை காதிர் முகைதீன் கல்லூரி விளையாட்டு விழா நடைப்பெற்றது.
பிப்ரவரி 26: அதிரையில் காது கேளா தோர் பேச இயலாதோர் நலச்சங்க கூட்டம் நடைபெற்றது - மார்ச் :
- மார்ச் 1: அதிரை பீச் கைப்பந்து கழகம்(BVC) நடத்தும் 15 ஆம் ஆண்டு மின்னொளி கைப்பந்து போட்டி நடைப்பெற்றது.
- மார்ச் 20: காதிர் முஹைதீன் கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்!! இலங்கை தமிழர்களை இனப் படுகொலை செய்த ராஜபக்சே கும்பலை கைது செய்ய கோரியும், இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா திருத்தங்களுடன் ஆதரிக்க வேண்டும், ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் இடுபட்டனர்.
- மார்ச் 30: அதிரை அதிமுக கிளை சார்பில் நேற்று மாலை அதிரை பேருந்து நிலையத்தில் கழக பொதுக்கூட்டம் நடைபெற்றது.
- ஏப்ரல் :
- ஏப்ரல் 15: அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் 64வது ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது.
- ஏப்ரல் 21: அதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் காலை 10.00 மணியளவில் கல்லூரியின் புதுபிக்கப்பட்ட கலையரங்கில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது .
- ஏப்ரல் 23: அதிரை AFCA நடத்தும் மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி 23-04-13 அன்று முதல் 02-05-13 வரை கிராணி மைதானத்தில் நடைபெற்றது.
- ஏப்ரல் 28: அதிரை மக்கள் அனைவரும் எதிர்பார்த்து இருந்த அதிரை பெஸ்டிவல் மிக கோலாகலமாக நடந்து முடிந்தது .
- மே :
- மே 2: காதிர் முகைதீன் கல்லூரியில் ஆங்கில இலக்கிய கழகத்தின் ஆண்டு விழா நடைபெற்றது .
- மே 2: அதிரையில் அதிரை ப்ரண்ட்ஸ் கிரிக்கெட் கிளப் [ AFCC ] சார்பாக மாவட்ட அளவில் Twenty-20 கிரிக்கெட் போட்டியை சிறப்பாக நடத்தினர். இதில் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்ற AFCC அணியினர்.
- மே 8: அதிரை நைட் ரைடர்ஸ் நடத்தும் மூன்றாம் ஆண்டு மாபெரும் மின்னொளி கிரிக்கெட் தொடர் போட்டி இரவு 8.30 மணியளவில் நமதூர் ஷிஃபா மருத்துவமனை எதிரே அமைந்துள்ள விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
- மே 10: அதிரையின் புகழ் பெற்ற கால் பந்து அணியான அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேசன் ( AFFA ) நடத்தும் பத்தாம் ஆண்டு மாபெரும் கால்பந்தாட்ட போட்டி நடைபெற்றது.இதில் தஞ்சை அன் வெற்றி பெற்றது.
- மே 18: கடற்கரைத்தெரு அமீரக அமைப்பின் சார்பாக கல்வி குறித்து விழிப்புணர்வு மாநாடு நடைபெற்றது.
- ஜூன் :
- ஜூன் 7: அதிரை தாருத் தவ்ஹீத்தின் அங்கமாகிய அர்ரவ்ழா இஸ்லாமிய மகளிர் கல்லூரியின் பட்டமளிப்பு விழா கடற்கரைத் தெரு ரயில் நிலையம் அருகே அமைந்துள்ள கல்லூரி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
- ஜூன் 12: அதிரை காதர் முகைதீன் பள்ளியில் ஆங்கிலம் வழி கல்வி அறிமுகம் ஆக்கப்பட்டது .இதில் GROUP 1 : TAMIL , ENGLISH ,(PHYSICS ,CHEMISTRY , BIOLOGY , MATHS )- ஆங்கிலம் வழி கல்வி முறையில் வகுப்புகள் எடுக்கபடும்
- GROUP 2 : TAMIL ,ENGLISH, (PHYSICS , CHEMISTRY , COMPUTER SCIENCE , MATHS )ஆங்கிலம் வழி கல்வி முறையில் வகுப்புகள் எடுக்கபடும் என்று குறிப்பட்டது .
- ஜூன் 14:அதிரை இளைஞர் கால்பந்துக்கழகம் 19-ஆம் ஆண்டு நடத்தும் S.S.M. குல் முகம்மது நினைவு 12-ஆம் ஆண்டு எழுவர் கால்பந்துத் தொடர் போட்டி நடைபெற்றது. இதில் இறுதி போட்டியில் கண்டனூர் அணி வெற்றி பெற்றது.
- ஜூன் 22: அல் மதரஸத்துஸ் ஸலாஹிய்யா அரபிக்கல்லுரியின் 114 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா நமதூர் காதிர் முகைதீன் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
- ஜூன் 25: அதிரை லயன்ஸ் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு நிகழ்ச்சி லாவண்யா திருமண மகாலில் நடைபெற்றது.மேலும் இதில் அதிரை பள்ளிகளில் சாதனை பெற்ற மாணவ/மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
- ஜூலை :
- ஜூலை 29: மல்லிப்பட்டினத்தில் இருந்து அதிரை வழியாக பட்டுக்கோட்டை செல்லும் SRM பேருந்து காளி கோயில் அருகில் எதிரே வந்த ஆட்டோவின் மீது மோதியதில் பேருந்து கவிழ்ந்தது. இதில் உயிர் சேதம் எதும் இல்லை .
- ஆகஸ்ட் :
- ஆகஸ்ட் 4: அதிரையில் அதிரை சிட்னி ஃபிரண்ட்ஸ் கிரிக்கெட் அணியின் சார்பாக மாபெரும் இப்தார் நிகழ்ச்சி ஆலடி தெரு முகைதீன் ஜும்ஆ பள்ளியில் நடைபெற்றது.
- ஆகஸ்ட் 7: அதிரை ப்ரெண்ட்ஸ் ஃபுட் பால் அசோசியேஷன் AFFA சார்பாக மாபெரும் இஃப்தார் நிகழ்ச்சி அதிரை ஷிஃபா மருத்துவமனை எதிரே அமைந்துள்ள விளையாட்டு கருசல் மணி மைதானத்தில் நடைபெற்றது.
- ஆகஸ்ட் 8: அதிரையில் பேருராட்சி சார்பாக மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.இதில் அதிரை அரசு பள்ளி மாணவ, மாணவிகள்,அதிரை பேருராட்சி துணை தலைவர் பிச்சை,வார்டு உறுப்பினர்கள் அப்துல் காதர்,பாஞ்சாலன்,சிவா குமார், அபுதாஹிர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- ஆகஸ்ட் 15: அதிரையில் 67 வது சுதந்திர விழா அணைத்து பள்ளிகளிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
- ஆகஸ்ட் 17: தமிழக அளவில் சிறந்த சமூக சேவகராக அதிரை சேர்ந்த புது கல்லூரி முன்னால் மாணவர் S.ஷைக் அப்துல் காதர் த/ பெ.சாகுல் ஹமீது தேர்வு செய்யப்பட்டார் .
- செப்டம்பர் :
- செப்டம்பர் 1: 50 வருடங்களுக்கு பிறகு துப்புரவு செய்யப்பட்டது அதிரை செய்னா குளம்.
- செப்டம்பர் 6: அதிரை ஆஸ்பத்திரித் தெரு (ஷாதுலியாத்தெரு) ஷாதுலியா புதுப்பள்ளியில் செயல் பட்டு வரும் தர்பிய்யத்துல் இஸ்லாமிய்யா பயிற்சி கலா சாலையின்(மக்தப் மதரஸா) 33 வது ஆண்டு விழா புதுப்பள்ளி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
- செப்டம்பர் 7: அதிரை ஏ.எல்.பள்ளி மாணவ, மாணவியர் கல்ந்து கொண்ட ப்ளாஸ்டிக் பை ஒழிப்பு மற்றும் சுற்றுப்புற சுகாதார விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
- செப்டம்பர் 8: அதிரை காதிர் முகைதீன் பள்ளியில் பல வருடங்களாக சிறப்பான முறையில் பணியாற்றி வரும் ஜனாப் A.L.அஷ்ரப் அலி M.Sc., M.Phil., B.Ed அவர்களுக்கு லயன்ஸ் சங்கம் சார்பாக நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது.
- செப்டம்பர் 10: அதிரை காதிர் முகைதீன் மேல்நிலப் பள்ளி ஆசிரியர் தினக் கொண்டாட்டம் சிறப்பாக கொண்டபட்டது.
- செப்டம்பர் 12: அதிரையில் விநாயகர் ஊர்வலம் அமைதியாக நடந்தது.
- செப்டம்பர் 21: அதிரை லயன்ஸ் சங்கம், காதிர் முகைதீன் கல்லூரி, தஞ்சை மீனாட்சி மருத்துவமனை இனைந்து நடத்தும் மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.
- செப்டம்பர் 22 : அதிரை TNTJ கிளை சார்பாக இரத்ததான முகாம் கிளை தலைவர் சகோதரர் பீர் முஹம்மது தலைமையில் சிறப்புடன் நடைபெற்றது.
- . செப்டம்பர் 27:அதிரையில் அறிஞர் அண்ணா 105 வது பிறந்த நாள் முன்னிட்டு அதிரை நகர திமுக சார்பாக திண்டுக்கல் ஐ லியோனி பட்டிமன்ற நிகழ்ச்சி சிறப்புடன் நடை பெற்றது.
- அக்டோபர் :
- அக்டோபர் 2: தக்வாபள்ளி மீன் மார்கெட்டில் தீவிபத்து இயற்பட்டது. இதில் உயிர் சேதம் எதும் இல்லை .பொருள் சேதம் தான் அதிகம் . .
- அக்டோபர் 19: அதிரை அல் -மாகத்திப் நடத்தும் அல் - குர்ஆன் மணணப் போட்டி செக்கடி பள்ளியில் சிறப்புடன் நடைபெற்றது.இதில் 180 க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் சிறப்பான முறையில் குர்ஆன் மனனம் மற்றும் கிராஅத் போட்டிகளில் கலந்து கொண்டு அவர்களது திறமையை வெளிபடுத்தினார்
- அக்டோபர் 20: அதிரை வரலாற்றில் முதல் முறையாக நமதூர் அணைத்து சமுதாய மக்களும் ஒன்று கூடும் நிகழ்ச்சியாக அதிரை ஈத் மிலன் எனும் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி மிகவும் விமரிசையாக நடந்தேறியது .
- அக்டோபர் 30: தஞ்சை மாவட்ட அளவில் நடைபெற்ற பாரதிதாசன் பல்கலைகழகம் ஆண் அழகன் போட்டியில் நமதூர் காதர் முகைதீன் கல்லூரி M.COM இரண்டாம் ஆண்டு படிக்கும் ஃபயாஸ் அஹமது தா/பெ அப்துல் ஜலீல் அவர்கள் 70 கிலோ எடை பிரிவில் முதல் இடமும் மற்றும் ஓவர் ஆல் சாம்பியன் பட்டதையும் வென்று சாதனை படைத்து உள்ளார்.
- நவம்பர்
- நவம்பர் 9: அதிரையில் PFI சார்பாக மினி மராத்தான் போட்டி நடைபெற்றது .இதில் பள்ளி மாணவர்கள் அதிகமாக கலந்து கொண்டனர்.
- நவம்பர் 17: அதிரை புஹாரி ஷரீஃப் (ஜாவியா) நிறைவு பெற்றது .இதில் 5000 பேர் மேல் கலந்து கொண்டனர் .
- நவம்பர் 19: அதிரை SDPI யின் சிஎம்பி கிளை புதிதாக உருவாக்கப்பட்டது.
- நவம்பர் 21: அதிரையில் SDPI கிளை சார்பாக அதிரை பேருந்து நிலையம் அருகே 3 கோரிக்கையை வலியுறுத்தி மாபெரும் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.இதில் அதிக பொது மக்கள் கலந்து கொண்டனர் .
- டிசம்பர் :
- டிசம்பர் 4 : அதிரை சேர்மன் மீது பதியப்பட்ட வழக்கு குறித்து சம்சுல் இஸ்லாம் சங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
- அந்த தீர்மானம் பின்வருமாறு:
- 1.அதிரை சம்சுல் இஸ்லாம் சங்கம் சார்பாக இது குறித்து ஒரு கடிதம் எழுதப்படும்
- 2.இந்த கடிதத்தில் நிர்வாகிகள் கையெழுத்திட்டு கலெக்டர் போன்ற அதிகாரிகளிடம் ஒரு மனதாக மனு அளிக்கப்படும்.
- டிசம்பர் 4: தவ்ஹீத் அமைப்புகளின் எதிர்ப்புக்கு மத்தியில் கடற்கரைத்தெரு கந்தூரி விழா நடை பெற்றது.
- டிசம்பர் 6: பாபர் மஸ்ஜித் இடிப்பு தினத்தை ஒட்டி, தஞ்சாவூரில் நடைபெற்ற மக்கள் திரள் ஆர்ப்பாட்டத்திற்கு கலந்து கொண்டார்கள் .
- வறண்ட குளங்கள் தொடர்பாக சமூக ஆர்வலர்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை வைத்தனர். இதில் அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம் அவர்களின் தலைமையில் சமூக ஆர்வலர்கள் ஜமீல் M. சாலிஹ், முத்துசாமி, சுப்பிரமணியன், முஹம்மது அப்துல்லா, அஹமது அமீன், அனஸ், தமீம் அன்சாரி, வீரையன், அன்வர் அலி, வாப்பு மரைக்காயர், ராவுத்தர், மு.க.செ. அபுல் ஹசன், கவுன்சிலர்கள் முஹம்மது செரீப், செய்யது, சாகுல் ஹமீது உள்ளிட்ட ஏனைய சமூக ஆர்வலர்களைக் கொண்ட குழுவினர்கள் இரு வாகனங்களில் தஞ்சைக்கு புறப்பட்டு சென்று மனு அளிதனர்.
- டிசம்பர் 24: எம்ஜிஆர் நினைவு தினத்தை முன்னிட்டு அதிரையில் அதிமுக கட்சியினர் அமைதி பேரணியை நடத்தினர். காலை 8 மணியளவில் அதிரை பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கிய பேரணி அரசு உயர்நிலைபள்ளி வரை சென்று திரும்பியது.
- டிசம்பர் 28: இந்திய முஸ்லிம் லீக் இளம்பிறை எழுச்சி பேரணியில் அதிரையர்கள் பெரும்திரளாக பங்கேற்றனர்.
இந்த வருடம் அதிரைக்கு பெருமை சேர்த்த நபர்களை பற்றி பார்போம் :
- அதிரை அளவில் +2 வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ / மாணவிகளை பற்றி பார்போம் :
1. பள்ளிகொண்டானில் இயங்கி வரும் லாரல் மேனிலையில் படித்து வரும் அதிரை மாணவர் ரிஜ்வான் த/பெ சீனி கமால் அவர்கள் BIO-MATHS பாடபிரிவில் 1155/1200எடுத்து அதிரையில் முதல் இடம் பெற்று சாதனை படைத்து உள்ளார்.
2.இமாம் ஷாபி பள்ளி மாணவி N .வசீமா அவர்கள் 1149/1200 அதிரையில் இரண்டாம் இடம் பெற்றார்
3. காதர்முகைதீன் பெண்கள் பள்ளி மாணவி D.மோகன பிரியா1107/1200 இவர் முன்றாம் இடம் பெற்றார் .
- 10 ம் வகுப்பு பொது தேர்வில் அதிரைக்கு பெருமை சேர்த்த மாணவ /மாணவிகளை பார்போம் :
- இமாம் ஷாபி பெண்கள் பள்ளி மாணவி A.K. சுஹைமா 489/500
- இமாம் ஷாபி பெண்கள் பள்ளி சேர்ந்த மாணவி A.ரிஹானா நர்கிஸ் 485/500 மதிப்பெண் மட்டும்
- காதர்முகைதீன் பெண்கள் பள்ளியின் M.யாஸ்மீன் 485/500 பெற்று இரண்டாம் இடமும்
- இமாம் ஷாபி பெண்கள் பள்ளி சேர்ந்த மாணவி A.ஆப்ரின் 482/500 மூன்றாம் இடமும் பெற்று உள்ளனர்
- காதர் முகைதீன் ஆண்கள் மேனிலை பள்ளி மாணவன் Y.அப்துஸ் ஷகூர் த/பெ யாகூப் அவர்கள் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 478 மதிப்பெண் பெற்று பள்ளியளவில் முதல் இடமும் மேலும் கணக்கு,அறிவியல்.மற்றும் சமூக அறிவியல் ஆகிய மூன்று பாடங்களில் சதம் எடுத்து காதர் முகைதீன் பள்ளி வரலாற்றிலேயே புதிய சாதனை படைத்து உள்ளார்.
விளையாட்டு துறையில் நமதூர் பெருமை சேர்த்தவர்களை பார்போம் :
- 1. தஞ்சாவூர் கிரிக்கெட் அசோசியேஷன் மாவட்டத்திற்கான தகுதி சுற்றுப்போட்டியில் ஆல் - ரவுண்டராக AFCC அணி வீரர் ஃபயாஸ் அவர்கள் தேர்ந்தேடுக்ப்பட்டார்.
- மற்றும் 22 வயதிற்குட்பட்டவர்கள் தகுதி சுற்றில் பங்கு பெற்ற அதிரை AFCC'ன் இளம் வீரர்கள்
- 1. ஃபவாஜ் - மட்டை வீச்சாளராக தகுதி
- 2. நிஜார் MT - மட்டை வீச்சாளராக தகுதி
- 3. ஃ ஜிப்ரி - All - Rounder'க தகுதி
- 4. வஹாப் - சுழற்பந்து வீச்சாளராக தகுதி பெற்றுள்ளனர்.
- 2. தஞ்சை மாவட்ட அளவில் நடைபெற்ற பாரதிதாசன் பல்கலைகழகம் ஆண் அழகன் போட்டியில் நமதூர் காதர் முகைதீன் கல்லூரி M.COM இரண்டாம் ஆண்டு படிக்கும் ஃபயாஸ் அஹமது தா/பெ அப்துல் ஜலீல் அவர்கள் 70 கிலோ எடை பிரிவில் முதல் இடமும் மற்றும் ஓவர் ஆல் சாம்பியன் பட்டதையும் வென்று சாதனை படைத்து உள்ளார்
- 3. அதிரை காதிர் முகைதீன் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் மாவட்ட அளவில் நடந்த டேபிள் டென்னிஸ் போட்டியில் சாதனை படைத்துள்ளனர். தஞ்சையில் நடந்த போட்டியில் வெற்றிபெற்று பள்ளிக்கும் ,அதிரைக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
- வெற்றி விவரம்:
- ஒற்றையர் பிரிவில் +2 மாணவர் (ஜமருத்தீன்) சாம்பியன் பட்டம் வென்றார்.
- இரட்டையர் பிரிவில் ( ஜமருத்தீன் மற்றும் அப்துல்லாஹ்)சாம்பியன் பட்டம் வென்றனர்.
- 4. பட்டுக்கோட்டை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பட்டுக்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்ளுக்கு தடகளப் போட்டிகள் நடத்தப்பட்டது . இதில் (காதிர் முஹைதீன் ஆண்கள் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு பயிலும் யூசுஃப்) என்ற மாணவர் இந்த வருடம் குண்டு எறிதல் போட்டியில் மூன்றாம் இடம் பெற்று பள்ளிக்கும், அதிரைக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
தொகுப்பு : N . காலித் அஹ்மத் (அதிரை பிறை நிரூபர்)
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது