ஏரிப்புறக்கரையில் மக்கள் நேர்காணல் முகாம்

Irshad Bin Jahaber Ali
0
                                  

அதிரை அருகே உள்ள ஏரிப்புறக்கரை கிராமத்தில் மக்கள் நேர்காணல் முகாம் வரும் 18ம் தேதி நடக்கிறது. டிஆர்ஓ சுரேஷ்குமார் தலைமை வகிக்கிறார். 

இதில் இந்திரா காந்தி முதியோர் உதவித்தொகை திட்டம்,  இந்திரா காந்தி மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை திட்டம், இந்திரா காந்தி விதவை உதவித்தொகை திட்டம், முதல்வரின் உழவர் பாதுகாப்பு திட்டம் மற்றும் இதன் தொடர்புடைய பல நலத்திட்டங்களினால் பொதுமக்கள் பயன்பெறலாம். மேலும் பட்டா மாறுதல், சான்றுகள் குறித்தான மனுக்களை முன்னதாகவே பட்டுக்கோட்டை தாசில்தாரிடம் விண்ணப்பிக்கலாம்.

இந்த முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை, கால்நடை முகாம், ஆதார் அடையாள முகாம், முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட முகாம், சுகாதாரத்தால் பொதுமக்களுக்கு பயனளிக்கும் வகையில் மருத்துவ முகாம் நடத்தப்படும். எனவே பொதுமக்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம். 

                                                                                    ஆக்கம்: இர்ஷாத் அஹமது                                                                                                  

                                                                                    அதிரை பிறை 

                           

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)