வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை யால், மழை, கடல் சீற்றம் போன்றவை இருந்ததால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் எச்சரித்தது.
இதனையடுத்து அதிரை, ஏரிப்புறக்கரை, கீழத்தோட் டம், மறவக்காடு ஆகிய பகுதிகளில் உள்ள பைபர் படகுகள் கடந்த 4 தினங்களாக கடலு க்கு செல்லாமல் இருந்தன.
இந்நிலையில் காற்றழுத்தம் அதிரைக்கும், பாம்பனுக்கும் இடையே
கரையை கடந்ததாலும், கடலில் சீற்றம் இல்லாததாலும் நேற்று முன் தினம் இரவு மீனவர்கள் கடலுக்கு
சென்றனர். பின்னர் கடலுக்கு சென்ற மீனவர்கள் நேற்று காலை மீன் பிடித்து விட்டு
கரைக்கு திரும்பினர்.
பல நாட்களாக மீன் பிடிக்க செல்லாத நிலையில், தற்போது அனைத்து
படகுகளிலும் மீன்கள், இறால்கள், நண்டுகள் அகப்பட்டன என்று மீனவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
courtesy:dinakaran


1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது