பட்டுக்கோட்டை மணிக்கூண்டில் பாலம் கட்டும் பணி இன்று முதல்
நடைபெறுவதை முன்னிட்டு, பட்டுக்கோட்டையில் இன்று முதல் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை
அறிவித்துள்ளது.
பட்டுக்கோட்டை நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்ட பொறியாளர் மற்றும்
காவல்துறை இனைந்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பட்டுக்கோட்டை - முத்துப்பேட்டை சாலை மணிக்கூண்டு முக்கத்தில்
நெடுஞ்சாலைத் துறை மூலம் சிறுபாலம் கட்டும் பணி இன்று (15/12/13) முதல் துவங்கப்பட்டுள்ளது. இப்பணி முடிவுடைய ஒரு
மாத காலமாகும் என்பதால் பெரிய தெரு - மணிக்கூண்டு வழியாக அனைத்து வாகனங்களும் வருவதற்க்கு தடை செய்யப்பட்டுள்ளது.
இதனால் பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்திலிருந்து மன்னார்குடி, மதுக்கூர், முத்துப்பேட்டை, திருத்துரைப்பூண்டி, ஆகிய வெளியூர்களுக்கு செல்லும் பேருந்துகள்,
அதிராம்பட்டினம், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ரோடு, மைனர் பங்களா வழியாக பாதை மாற்றப்பட்டுள்ளது. இந்த
முயர்ச்சிக்கு மக்கள் நல்ல ஒத்திழைப்பு வழங்குமாறு காவல்துறையினர் கேட்டுக்கொண்டனர்.
dinakaran

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது