கடலோர பாதுகாப்பு குழும ஐ.ஜி சொக்கலிங்கம் தலைமை வகித்தார். கூட்டத்தில் கடற்படை, சுங்கத்துறை, வனத்துறை, வருவாய்துறை என பல்வேறு துறை அதிகாரிகளும், தஞ்சை மாவட்டத்தில் உள்ள 37 மீனவ கிராம பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர். கூட்டத்தில், மீனவர்களின் முக்கிய பிரச்னைகள் பற்றி பேசப்பட்டது.
ஒவ்வொரு மீனவர்களும் பல்வேறு கோரிக்கைகளை முன்
வைத்தனர். முக்கியமாக அனைத்து மீனவர்களுக்கும் வாக்கி டாக்கி, ஜி.பி.எஸ். கருவி, லைப்ஜாக்கெட், சூரிய ஒளி மின்சாரம்
போன்றவை முன் வைக்கப்பட்டது. பின்னர் ஐ.ஜி.சொக்கலிங்கம் பேசுகையில், கடலில் தடை
செய்யப்பட்ட கடல் வாழ் உயிரினங்களை பிடிக்கக் கூடாது. இரட்டைமடி, சுருக்கு மடி ஆகிய
வலைகளை பயன்படுத்தக்கூடாது.
கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் இந்திய, சர்வதேச எல்லைக்குள்
மீன் பிடிக்க வேண்டும், மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் போது படகிற்கு உரிய ஆவணங்களை
எடுத்துச் செல்ல வேண்டும்.
கடலில் சந்தேகப்படும் வகையில் மர்ம படகுகள் மற்றும்
அன்னிய நபர்கள் நடமாட்டம் இருந்தால் 1093 என்ற எண்ணை தொடர்பு கொண்டு
விபரங்களை கூறவும். கடலில் ஏற்படும் இயற்கை சீற்றங்களில் மீனவர்கள் அகப்பட்டுக்
கொண்டால் 1093 எண்ணை தொடர்பு கொண்டால், உடன் வந்து காப்பாற்றுவார்கள் என்றார்.

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது