தஞ்சை மாவட்டத்தில் புதிதாக 77,488 பேர்
சேர்க்கப்பட்டுள்ளனர். மொத்தத்தில் மாவட்டத்தில் 17,37,895 வாக்காளர்கள் உள்ளனர்.
புதிய வாக்காளர்களுக்கு அடையாள அட்டை வரும் 25ம் தேதி
வழங்கப்படுகிறது.
தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியலை கலெக்டர் சுப்பையன் நேற்று வெளியிட்டார். இதை அனைத்து கட்சி பிரதிநிதிகளும் பெற்று கொண்டனர். அப்போது கலெக்டர் சுப்பையன் கூறியதாவது:
தஞ்சை மாவட்டத்தில் திருவிடைமருதூர், கும்பகோணம், பாபநாசம், திருவையாறு, தஞ்சாவூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி என்று 8 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. இந்த 8 சட்டமன்ற தொகுதிக்கும் கடந்த 1ம் தேதியை தகுதிநாளாக கொண்டு மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
பட்டுக்கோட்டை தொகுதியில் 1,18,099
ஆண்,
1,85,062 பெண் என 2,10,461 வாக்காளர்கள் உள்ளனர்.
ஏற்கனவே 8 சட்டமன்ற தொகுதியிலும்
8,45,395
ஆண்,
8,49,953 பெண் என மொத்தமாக 16,95,357 வாக்காளர்கள்
இருந்தனர். தற்போது 77,488 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். புதிதாக வெளியிடப்பட்ட
வாக் காளர் பட்டியல் கலெக்டர் அலுவலம், ஆர்டிஓ அலுவலகங்கள், விஏஓ அலுவலகங்கள், வாக்குச்சாவடி மையம்
ஆகிய இடங்களில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படும்.
இதை பொதுமக்கள் பார்த்து கொள்ளலாம். வரும் 25ம் தேதி புதிதாக சேர்க்கப்பட்ட அனைத்து வாக்காளர்களுக்கும் வாக் காளர் அடையாள அட்டை வழங்கப்படும். அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு வாக்காளர் பட்டி யல் அடங்கிய தொகுதி 2 இலவசமாக வழங்கப்படும். கூடுதலாக தேவைப்படுவோர் அதற்குரிய கட்டணத்தை செலுத்தி பெற்று கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் சுப்பையன் கூறினார்.
அதிமுக சார்பில் காந்தி, திமுக சார்பில்
செல்வம், பாஜக சார்பில் உமாபதி
மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
courtesy:dinakaran


1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது