காரைக்கால் மாவட்ட ஆட்சியராக முத்துப்பேட்டையை சேர்ந்த முஹம்மது மன்சூர் அவர்கள் நியமனம்

0

 காரைக்கால் மாவட்ட ஆட்சியராக முத்துப்பேட்டையை சேர்ந்த சகோதரர். AKL. முஹம்மது மன்சூர் IAS. அவர்கள். முத்துப்பேட்டை மரைக்காயர் தெரு குத்பா பள்ளிவாசல் எதிரே உள்ளது சகோதரர் மன்சூர் அவர்களின் வீடு.. இனிமை, எளிமை, பொறுமை, மற்றும் ஆளுமைகளுக்கு சொந்தக்காரராக விளங்கி வருபவர் மன்சூர். 

கல்வியில் எப்படி அதிக நாட்டம் உடையவரோ, அதே போல் சன்மார்க்க நெறிகளையும் பின்பற்ற கூடியவர். .ஐந்து வேலை தொழுகை தவறாத மன்சூர் அவர்கள், ஜமாஅத் செல்வதில் அதீக நாட்டம் உடையவர். தனது பள்ளி படிப்பையும் கல்லூரி படிப்பையும் சென்னை கிரசென்ட் தனியார் மெட்ரிக் பள்ளியில் முடித்தார் மன்சூர். 

பின்னர் டெல்லியில் உள்ள இந்திய ஆட்சி பனி அகடாமியில் சேர்ந்து பயிற்சி பெற்றார். இதனை தொடர்ந்து காரைக்கால் மாவாட்ட துணை ஆட்சியராகவும், பின்பு புதுவை மாநில சுற்றுலா துறை இயக்குனராகவும், புதுவை மாநில சிவில் சப்ளை இயக்குனராகவும் பணியாற்றி வந்தார். 

இந்நிலையில் முத்துப்பேட்டை மன்சூர் அவர்களை, காரைக்கால் மாவட்ட ஆட்சி தலைவராக நியமித்து புதுவை அரசு உத்தரவிட்டுள்ளது. அன்பு சகோதரர் மன்சூர் அவர்களின் மக்கள் பணி சிறக்க எல்லாம் வல்ல இறைவனிடம் துவா செய்வோம். ஆமீன்.

முத்துப்பேட்டை பிபிசி


Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)