தஞ்சாவூர் ரெயில்களில் குழந்தைகள் கடத்தலா?- தஞ்சை போலீசார் திடீர் சோதனை

0
ரெயிலில் குழந்தைகள் கடத்தப்பட்டு வருவதாக கிடைத்த தகவலின்படி தஞ்சைக்கு வந்த ரெயிலை நிறுத்தி போலீசார் திடீரென சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

நாகை மாவட்டம் செம்பனார் கோவில் அருகே கடிச்சம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சேகர் மகன் ரித்திக், ரமேஷ் மகள் தர்ஷினி ஆகியோர் நேற்று மாலை வீட்டின் அருகே விளையாடிக் கொண்டு இருந்தபோது திடீரென மாயமானார்கள்.

வெகுநேரம் ஆகியும் குழந்தைகள் வீட்டிற்கு வராததால் பெற்றோர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். மேலும், இதுகுறித்து நாகப்பட்டினம், தஞ்சை, திருவாரூர் ஆகிய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இதனால் அந்தந்த மாவட்டத்தைச் சேர்ந்த போலீசார் ரெயில்களில் குழந்தைகள் கடத்தப்பட்டு வருகிறார்களாக என்று நேற்று இரவு ரெயில்களில் திடீரென சோதனையில் ஈடுபட்டனர்.

அதன்படி தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தர்மராஜன் உத்தரவின் பேரில் ஆயுதப்படை, ரெயில்வே போலீசார்கள் சுமார் 50 பேர் நேற்று இரவு தஞ்சை ரெயிவே ஸ்ஷேனுக்கு வரும் ரெயில்களை நிறுத்தி சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது மயிலாடுதுறை பயணிகள் ரெயில் இரவு 10.30 மணிக்கு தஞ்சைக்கு வந்தது. ரெயில்வே ஸ்டேஷனில் நின்ற போலீசார் அந்த ரெயிலை நிறுத்தி சோதனை நடத்தினர்.

பயணிகள் கொண்டு வந்த பெட்டி, சூட்கேஸ் மற்றும் ரெயில் பெட்டிகள் 15 ஆகியவற்றை சோதனை செய்தனர். ஆனால் குழந்தைகள் கடத்தப்பட்டது தொடர்பாக எவ்வித தகவலும் கிடைக்கவில்லை.

இதேபோல் திருச்சியில் இருந்து வந்த ரெயில்களையும் போலீசார் சோதனை செய்தனர். இந்த சோதனை இன்று அதிகாலை 4 மணி வரை நீடித்தது. இதனால் தஞ்சை ரெயில்வே ஸ்டேஷனில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் குழந்தைகள் கடத்தல் தொடர்பான தகவல் தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.

இதனால் 3 மாவட்டங் களிலும் போலீசார் உஷார் படுத்தப்பட்டு உள்ளனர். எனவே, பள்ளிக்கு சென்று விட்டு வீட்டிற்கு வரும் குழந்தைகளை வீட்டின் அருகில் அல்லது ரோட் டோரத்திலோ விளையாடி அனுப்ப வேண்டாம் என்றும், குழந்தைகளின் மீது பெற்றோர்கள் அதிக கவனம் செலுத்தி கண்காணிக்க வேண்டும் என்றும் போலீசர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
-maalaimalar

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)