எப்புடி இருந்த செய்னா குளம் இப்புடி ஆயிடுச்சு..!

0
நமதூரில் கடந்த வருடத்தின் ஹாட்டான நியூஸ் என்று எடுத்துக் கொண்டால் அதிரை குளங்களை தூர்வாருவது மற்றும் அதிரை குளங்களுக்கு தண்ணீர் கொண்டு வருவது. இதில் ஓரளவு வெற்றியடைந்தது, அதிரை செய்னா குளம் மற்றும் செட்டியாக் குளங்களை தூர்வாரியது எனலாம். இதிலும் பல இடற்பாடுகள் இருந்தன ஆனாலும் இந்த முயர்ச்சி ஓரளவு வெற்றியடைந்தது. 

சரி விஷயத்துக்கு வருவோம்..
 கீழத்தெரு, காலேஜ் பின்புறமுள்ள செடியன் குளத்தின் வடிகால் குளமான இது ஏறத்தாள 50 வருடங்களுக்கும் மேலாக சுத்தம் செய்யாமல் சாக்கடை போல் காட்சியளித்த இது செடியன் குளத்தின் வடிகாளாக மட்டும் இல்லாமல் அப்பகுதி குடியிருப்புகளின் வடிகாளாகவும் மாற்றம் கண்டு ஒரு மினி கூவமாகவே காட்சி தந்தது. 

இந்த குளத்தை கடந்த சில மாதங்களாக ராட்ச்சத இயந்திரங்கள் மூலம் தூர்வாரப்பட்டு தற்பொழுது நல்ல தோற்றத்துடன் சுற்றுபுற வேலி அமைக்கப்பட்டு உள்ளது. பல வருடங்களாக அயல் நாட்டில் இருந்து தற்பொழுது ஊர் திரும்பியுள்ளவர்கள் " அட நம்ம செய்னா குளமா இது! எப்புடி இருந்த குளம் இப்புடி அயிடுச்சே!" என கூறும் அளவுக்கு இது மாற்றம் கண்டுள்ளது.


பழைய செய்னா குளம்

 புதிய செய்னா குளம்

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)