சவுதியில் பணிபுரியும் அதிரை ஊழியர்களின் கவனத்திற்கு!!!

Irshad Bin Jahaber Ali
0
நிகாதத் சட்டம் விரிவு: சவுதியில் வெளிநாட்டு ஊழியர்கள் ஆண்டுகள் மட்டுமே தங்க அனுமதி. 

ரியாத்: சவூதி அரேபியாவில் நிகாதத் சட்டத்தை விரிவு படுத்தும் திட்டமாக இனி, வெளிநாட்டு ஊழியர்கள் அதிகபட்சமாக ஆண்டுகள் மட்டுமே அங்கு தங்கலாம் என்ற புதிய கட்டுப்பாடு அமலுக்கு வர உள்ளது.



கடந்தாண்டு சவூதி அரேபியாவில் உள்நாட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில்நிகாதத் என்ற புதிய சட்டம் கொண்டு வரப்பட்டது. அதன்படிஅங்கு சட்டவிரோதமான முறையில் தங்கி இருந்த லட்சக்கணக்கான வெளிநாட்டு ஊழியர்கள் வெளியேற்றப்பட்டனர். 



இந்நிலையில்வெளிநாட்டு ஊழியர்களை மேலும் குறைத்துவிட்டுஅதிக சம்பளத்துடன் உள்நாட்டு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் வகையில் நிகாதத் சட்டத்தை விரிவுபடுத்த அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.




அதன்படிதொழிலாளர் அமைச்சகம் பல புதிய விதிமுறைகளை தயாரித்துள்ளது. இந்த சட்ட முன்வரைவு தற்போது அரசின் ஆய்வில் இருக்கிறது. இந்த சட்டத்தின்படிவெளிநாட்டு ஊழியர்கள் அதிகபட்சம் ஆண்டுகள் வரை சவூதியில் பணியாற்ற முடியும். இந்த கட்டுப்பாடு காரணமாக ஏராளமான இந்திய தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள். 



ஏனெனில்சவூதி அரேபியாவில் குடியேறிய இந்தியர்கள் தான் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.


                                                        தகவல்: முஹம்மது இம்தியாஸ் 

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)