ஆதார் அட்டைக்காக புகைப்படம் எடுக்கும் பணி மார்ச் மாதம் வரை நீட்டிப்பு

Irshad Bin Jahaber Ali
1
ஆதார் அட்டை வழங்குவதற்காக புகைப்படம் எடுக்கும் பணி மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு உயர் அதிகாரி கூறினார். இந்தியா முழுவதும் 2010ம் ஆண்டு ஜூன் முதல் ஜூலை மாதம் வரை வீடு வீடாக மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. அதன் அடிப்படையில் தற்போது தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்பிஆர்) மற்றும் ஆதார் அட்டை வழங்குவதற்காக கைரேகை, விழித்திரை, புகைப்படம் பதிவு செய்யும் பணி தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. 2011ம் ஆண்டு ஜூன் மாதம் துவங்கிய பணி தற்போதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தற்போது சென்னை முழுவதும் புகைப்படம் எடுக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. 

தமிழகம் முழுவதும் பொதுமக்கள் வசிக்கும் பகுதி அருகே ஆதார் அட்டை எடுக்கும் பணிக்கான மையம்  கடந்த டிசம்பர் மாதம் வரை செயல்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழகம் முழுவதும் சுமார் 1 கோடியே 95 லட்சம் பேர் இன்னும் புகைப்படம் எடுக்க வேண்டியதிருப்பதால், ஆதார் அட்டை வழங்குவதற்காக புகைப்படம் எடுக்கும் பணி மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

 பின்னர் ஏப்ரல் மாதம் முதல் ஒவ்வொரு மாநகராட்சி அலுவலகம், மண்டல அலுவலகம், கலெக்டர், தாலுகா, நகராட்சி அலுவலகங்களில் மட்டுமே செயல்படும். விடுபட்டவர்கள் குடும்பத்துடன் அங்கு சென்று புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம்.


இதுவரை ஆதார் அட்டைக்கான புகைப்படம் எடுத்துக் கொண்ட 4,78,38,885 பேரில் சுமார் 3 கோடியே 86 லட்சம் பேருக்கு ஒன்றரை மாதத்திற்குள் தபால் மூலம் அல்லது எஸ்எம்எஸ் மூலம் என்பிஆர் நம்பர் மற்றும் ஆதார் அடையாள அட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

தஞ்சாவூர்  மாவட்டம்    மக்கள்தொகை(5 வயதுக்கு மேல்)    ஆதார் புகைப்படம் எடுக்கப்பட்டவர்கள்    சதவீதம்

தஞ்சாவூர்    22,44,009            16,89,565            75.29
-dinakaran

Post a Comment

1Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment