மதீனா மஸ்ஜிதுன் நபவி பள்ளிக்கு மிக அருகாமையில் அமைந்திருப்பது இஷ்ராக் அல் மதீனா உணவகம். மதீனாவிற்க்கு உம்ராவுக்காக வரும் பெரும்பான்மையானோர் இந்த உணவகத்தில் தான் தங்குவர். இந்த உணவத்தில் நேற்று மதியம் 2:33 மணியளவில் கரும்புகையுடன் கடுமையான தீ இந்த உணவகம் முழுவதும் பரவியது.
இந்த விபத்தில் 15 உம்ரா பயணிகள் தீயில் கருகியும், மூச்சுத்திணறியும் இறந்துள்ளானர். இதில் உயிர் இழந்தவர்கள் எகிப்து நாட்டை சேர்ந்த உம்ரா பயணிகள் என கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் இந்த விபத்தில் 130 பேர் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து நடந்த போது அந்த உணவகத்தில் சுமார் 700 உம்ரா பயணிகள் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த தீ யை மாலை 5:00 மணிவரை கடும் போராட்டத்திற்கு பின் சிவில் பாதுகாப்பு வீரர்கள் அனைத்தனர். விபத்து நடந்த இடத்துக்கு உடனே விரைந்த மதீனா கவர்னர் இளவரசர் ஃபைசல் பின் சல்மான் காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறியதோடு விபத்து நடத்த காரணத்தை கேட்டறிந்தார்.
தீ காரணங்களை கண்டறிய விசாரணை நடைப்பெற்று வருகிறது. அதில் இந்த விபத்து மின் கசிவின் காரணமாக ஏற்பட்டதாக கூறப்படுகிறது. காயமடைந்தவர்கள் மதினா, கிங் மருத்துவமனைக்கும் அன்ஸார் மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் காயமடைந்தவர்களுக்கு அல்லாஹ் நல்ல சுகத்தை வழங்குவானாக!
விபத்தில் உயிர் இழந்தவர்களுக்கு அல்லாஹ் ஷஹீதுடைய அந்தஸ்தை வழங்குவானாக!
அவர்களில் கப்ருகளை சுவர்க்க பூஞ்சோலைகளாக ஆக்குவானாக!
அதிரை பிறை செய்திகளுக்காக....
சவூதியிலிருந்து ஜஹபர் அலி
This comment has been removed by a blog administrator.
ReplyDelete