ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கி ஊழியர்கள் 2 நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். 27 பொதுத்துறை வங்கிகளுக்கு கடந்த 2012ம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கு பின்னர் ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை. கடந்த டிசம்பர் மாதம் வங்கிகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததையடுத்து நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்தனர். 30% ஊதிய உயர்வு வங்கி சீர்திருத்த நடவடிக்கைகளை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்ததால் அவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். நாடு முழுவதும் 80,000 வங்கி கிளைகளில் பணிபுரியும் 10 லட்சம் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், தனியார் மற்றும் அயல்நாட்டு வங்கிகளில் பணியாற்றும் ஊழியர்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் பண பரிவர்த்தணை உள்ளிட்ட அனைத்து சேவைகளும் முடங்கும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் பல கோடி ரூபாய் அளவில் பணபரிவர்த்தனை பாதிக்கும் நிலை உருவாகியுள்ளது. ஏடிஎம் சேவையும் பாதிக்க வாய்ப்புள்ளது. கடந்த டிசம்பர் 18ம் தேதி ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
(நன்றி மாலை மலர்)
இந்தியன் பேங்க் பூட்டியே இருப்பது நல்லது
ReplyDeletecomments good
ReplyDelete