பட்டுக்கோட்டையில் வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பு

0
பட்டுக்கோட்டையில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டதால்4 நீதிமன்றங்களில் பணிகள் பாதிக்கப்பட்டது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் செயற்குழு கூட்ட தீர்மானத்தின்படி சென்னை உயர்நீதிமன்றத்திற்கு நீதிபதிகளை தேர்ந்தெடுப்பதில் தற்போது தேர்வு செய்து அனுப்பியுள்ள பட்டியலை திரும்ப பெறக் கோரியும், இனி புதிதாக
தயாரிக்கப்படவிருக்கும் பட்டியலில் 3ல் 1 பங்கு என்ற விகிதாசாரத்தில் மாவட்ட அளவில் பணிபுரியக்கூடிய சிறந்த, திறமை வாய்ந்த, நேர்மையான வழக்கறிஞர்களை தேர்வு செய்ய வேண்டுமென்ற கோரிக்கை உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய, மாநில அரசுகள் மற்றும் உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பட்டுக்கோட்டை வழக்கறிஞர்கள் நேற்று நீதிமன்ற பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதில் அனைத்து வழக்கறிஞர்களும் கலந்து கொண் டனர்.
இதனால் பட்டுக்கோட்டை சின்னையா தெருவில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம், மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், சார்பு நீதிமன்றம், குற்றவியல் நடுவர் நீதிமன்றம் ஆகிய 4 நீதிமன்றங்களில் நீதிமன்ற பணிகள் பாதிக்கப்பட்டன.  


இந்த போராட்டம் இன்றும் நடைபெறும் என்று வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

-dinakaran

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)