அதிரை காப்பி பேஸ்ட் இணையதளத்துக்கு அதிரை பிறையின் எச்சரிக்கை..!அதிரைபிறை.இன்,
அதிரையை பற்றிய அனைத்து தகவல்களையும் உடனுக்குடன், உள்ளது உள்ளபடி, நேர்மையாக, யாருக்கும்
வலைந்து நெளிந்து போகாமல் செய்திகளை பதிந்து வருகிறோம். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அதிரையில்
சமுக அக்கறை கொண்ட நபர்களை கொண்டு மிக சிறப்பான முறையில் செய்துவருகிறோம். தற்பொழுது
இதை அதிரைபிறை.இன் என இணையதளமாகவும் மாற்றியுள்ளோம்.
இது
போன்று பல தொழில்நுட்பங்களை அதிரை பிறையில் உபயோகித்துள்ளோம். இதனால் தற்பொழுது அதிரை
வாசகர்கள் மட்டுமில்லாமல் வெளியூர் வாசகர்களும் இந்த தளத்தை விரும்பி பார்க்கிறார்கள்.
இவ்வாறு நாம் கடும் சிரமங்களுக்கிடையில், சம்பவ இடத்துக்கு உடனுக்குடன் சென்று உண்மை
நிலவரங்களை பதிந்து வரும் வேளையில் அதிரையில் இயங்கிக்கொண்டிருக்கும் ஒரு முன்னனி இணையதளம்
ஒன்று நமது செய்திகளையும் புகைப்படங்களையும் இலகுவாக காப்பி செய்து தாங்கள் இணையதளத்தில்
உடனுக்குடன் எந்த ஒரு நன்றி அறிவிப்பும் சொல்லாமல் பதிந்து விடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
இவர்கள் இது போல் செய்து விட்டு நாங்கள் அவர்களிடம் காப்பி செய்ததாக பிறரிடம் அவதூறு
பரப்பிவருகின்றனர்.
அது
மட்டுமில்லாமல் எங்களுக்கு முன்பு செய்தியை பதிந்தவாறு மக்களை ஏமாற்றுவதற்க்காக அவர்கள்
செய்தி பதிந்த நேரத்தையும் மாற்றியுள்ளார்கள். அவர்கள் முன்னனி இணையதளம் என்பதாலும்
அவர்கள் நேரத்தை மாற்றுயுள்ளதாலும் மக்கள் நாம் தாம் அவர்களிடம் காப்பி செய்வதாக மக்கள்
எண்ணுயுள்ளனர். நேரத்தை மாற்றினால் மக்களை ஏமாற்றிவிடலாம், ஆனால் மறைவானவற்றையும் நீங்கள்
செய்வதையும் நாங்கள் செய்துகொண்டிருப்பதையும் அல்லாஹ் கண்கானித்துக்கொண்டிருக்கிறான்.
இது போன்ற செயல்களை சம்பந்தப்பட்ட இணையதளம் இனி செய்யாமல் தவிர்த்துக்கொள்ளுங்கள்.
அவர்கள்
இது போல் எங்கள் செய்திகளை காப்பிபேஸ்ட் செய்ததற்க்கான அனைத்து ஆதாரங்களும் எங்களிடம்
உள்ளது.
"இறைவனுக்கு
அஞ்சிக் கொள்ளுங்கள்"
இளைஞர்கள் ஒன்றிணைந்து சிறந்த சேவையை செய்து வரும் உங்களுக்கு மன உளைச்சல் ஏற்பட்டிருக்கும் என்பதை நாங்கள் நன்குஅறிவோம். இதுபோன்று எங்கள் தளத்திற்கும் அனுபவங்கள் ஏற்பட்டுதுண்டு. இது குறித்து கடந்த [ 06-12-2013 ] அன்று பதிவிட்டிருந்தோம் - சம்பந்தப்பட்டவர்கள் திருந்துவார்கள் என எண்ணியிருந்தோம். ம்ஹூம்... திருந்துவதாக தெரியவில்லை... இறைவனிடம் சாட்டிவிடுங்கள்
ReplyDeleteஅதிரை நியூஸில் வெளியான பதிவு உங்களின் பார்வைக்காக :
அதிரை நியூஸ் - 'உள்ளூர் நிகழ்வுகளை உடனுக்குடன்' வாசகர்களுக்கு வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் உருவாக்கப்பட்டதுதான் இந்த செய்திதளம். உள்ளூரிலிருந்து பொதுநல நோக்கில் மிகுந்த சிரமங்களுக்கிடையே சம்பந்தப்பட்டவர்களை நேரடியாகத் தொடர்புகொண்டும், நேரடியாக களஆய்வு செய்தும் தகவல்கள் சேகரிக்கப்பட்டு தளத்தில் செய்தியாக பதியப்பட்டு வருகின்றன. இவ்வாறாக பதியப்படும் செய்திகளையும் புகைப்படங்களையும் பதிந்த சில மணி நேரங்களில் எங்கேயோ இருந்துகொண்டு இலகுவாக காப்பி செய்யப்பட்டு குறிப்பிட்ட வலைதளமொன்றில் தொடர்ந்து பதியப்பட்டு வருகின்றன. இதுகுறித்து சம்பந்தப்பட்டவர்களிடம் நேரடியாகவும், தொலைபேசி வாயிலாகவும் நட்பு முறையில் எடுத்துச்சொல்லியும் இந்த இழிவான செயல் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.
எங்களைப் பொறுத்தவரை எங்களால் பதியப்படும் செய்திகளை பிற சகோதர தளங்கள் எடுத்துப்பதிவதில் எவ்வித ஆட்சபனையும் எங்களுக்கு இல்லையென்றாலும் அதிரை நியூஸ் பெயரை அடிக்குறிப்பிட்டு பதிவதையே நாங்கள் விரும்புகிறோம். ஆதலால் அதிரை நியூஸின் செய்திகளை / புகைப்படங்களை எடுத்துப்பதியும் நண்பர்கள் எங்களின் தள முகவரியை நன்றியுடன் குறிப்பிட்டு பதிய அன்புடன் வேண்டுகிறோம். இதுதான் ஊடக தர்மமும் ஆகும்.
அதிரை நியூஸ் குழு