பள்ளி முதல் பல்கலைக்கழகங்கள் வரை இஸ்லாமிய இலக்கியங்களை பாடத் திட்டத்தில் சேர்க்க வேண்டும் என இஸ்லாமிய தமிழ் இலக்கிய கழகத்தின் 8-வது பன்னாட்டு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.கும்பகோணத்தில் பிப். 14-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை இஸ்லாமிய தமிழ் இலக்கிய கழகத்தின் 8-வது பன்னாட்டு மாநாடு நடைபெற்றது.
நிறைவு விழாவில் நாகூர் ஹனீபாவுக்கு ரூ. 1 லட்சத்துடன் கூடிய உமறுப்புலவர் விருதை அவரது மகன் நெüசாத் அலி பெற்றுக் கொண்டார். நிறைவு விழாவுக்கு கழகத்தின் தலைவர் கவிக்கோ அப்துல்ரகுமான் தலைமை வகித்தார். ஐ.நா.சபை ஆசிய பசிபிக் வர்த்தக ஆலோசனைக் குழுத் தலைவர் டத்தோ முகமது இக்பால் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.எம். அக்பர்அலி கலந்து கொண்டு, இஸ்லாமிய இலக்கிய கழக அஞ்சல்தலையை வெளியிட்டு பேசினார்.
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: பள்ளி முதல் பல்கலைக்கழகங்கள் வரை இஸ்லாமிய இலக்கியங்களை பாடத் திட்டத்தில் சேர்க்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் 10 சதவீதம் இட ஒதுக்கீட்டை இஸ்லாமியர்களுக்கு வழங்க வேண்டும். உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் மீண்டும் உருது பாடத் திட்டத்தை கொண்டு வர வேண்டும். சென்னையில் செயல்பட்டு வந்த உருது ஆசிரியர் பயிற்சி கல்லூரியை மீண்டும் திறக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது