''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
நெல்லை மாவட்டம் சங்கரன் கோவில் அருகில் உள்ள கள்ளிக் குளம் ஊரை சேர்ந்த சவுந்தர ராஜு என்பவர் இவர் குவைத் நாட்டிற்கு சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு சென்றார் இவருக்கு திருமணம் முடிந்து 12வயதில் ஒரு மகள் உள்ளார்,
இவர் குவைத் தமுமுகவை சந்தித்து தனக்கு நேர்ந்த கொடுமையை கூறி உதவ வேண்டி கேட்டுக் கொள்ள
தமிழகத்தில் மாநில தலைவர் அனுமதியுடன் நெல்லை மேற்கு மற்றும் கிழக்கு மாவட்ட தமுமுக நிர்வாகத்திற்கு தகவல் கொடுக்கப் பட்டு உதவ வேண்டி கேட்டுக் கொள்ளப் பட்டது
அதன் அடிப்படையில் நெல்லை மேற்கு மாவட்ட தமுமுக செயலாளர் சங்கை திவான் மைதின் மற்றும்
கிழக்கு மாவட்ட பொறுப்புக் குழு தலைவர் அப்துல் வாகித் ,குவைத் மண்டல அமைப்பு செயலாளர் பீர் மரைக்காயர் மற்றும்
பாதிக்கப் பட்ட குடும்பத்தினர் ஆகியோர் நெல்லை மாவட்ட ஆட்சியர் அவர்களை சந்தித்து பாதிக்கப் பட்ட சவுந்தர ராஜ் அவர்களை மீட்க கேட்டுக் கொள்ளப் பட்டது
விபரம்
;;;;;;;;;;;;;;
குவைத்தில் பணி புரியும் சவுந்தராஜ் அவர்கள் பணி முடிந்து வரும் வழியில் ஒரு சில அராபிய இளைஞர்கள் அவரிடம் உள்ள பணத்தை பிடுங்கும் நோக்கில் கடுமையாக தாக்கி அவரிடம் உள்ள அனைத்து பொருட்களையும் எடுத்து சென்று விட்டனர்
இதனை அவரது கம்பெனிக்கும் ,காவல் துறைக்கும் தகவல் சொல்ல எந்த பயனும் இல்லை
மேலும் திருடர்கள் இவரது மணி பர்சை எடுத்து சென்று விட்டதால் அதில் தான் இவரது குடியுருமை சான்றிதல் இருந்துள்ளது காணாமல் போகி விட்டதால் அதனை எடுத்து தர கம்பெனியில் சொல்ல கம்பெனியும் புதியதாக எடுத்து கொடுத்து விட்டது
தொடர்ந்த பிரச்சனை
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
இவரும் தனக்கு ஏற்ப்பட்ட காயத்திற்கு மருத்துவமனைக்கு சென்று காயத்திற்கு மருந்து போட்டு சரி செய்து விட, குடியுரிமை சான்றிதல் கிடைத்து விட வழக்கம் போல் வேலைக்கு சென்றுள்ளார்,,
இந்த சூழ்நிலையில் ஒரு போன் கால் வர அலறி உள்ளார்
மற்றவருக்கும் படிப்பினை
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
ZAIN கம்பெனியில் இருந்து உங்கள் குரியுரிமை சான்றிதல் மூலம் எடுக்கப் பட்ட இரண்டு போனுக்கு சுமார் 1074 தீனார் (2. 35 .000 ஆயிரம்) கட்ட வேண்டும் எனவும் இல்லை எனில் நீங்கள் ஊருக்கு செல்ல முடியாது என கூற செய்வதறியாது திகைத்துள்ளார்
குவைத் தமுமுக மூலம் கிடைத்த ஆவணங்கள்
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
ZAIN கம்பெனிக்கு நேரில் சென்று இந்த போன் இவரின் நம்பருக்கு வாங்க வில்லை என கூ ற இவர் வாங்கியதாக பில்கள் அனைத்தையும் காட்ட அனைத்திலும் ஜெராக்ஸ் எடுத்துக் கொள்ளப் பட்டது
இவரின் பெயரில் வாங்கிய கடைக்கு சென்று நடந்த அநீதியை கூ ற அந்த கடை உரிமையாளர் ஒன்றும் கண்டுகொள்ள வில்லை
இந்திய தூதரகத்தின் மனித நேயம் ?
...........................
எந்த தவறும் செய்யாத அடி உதை வாங்கி ,பணமும் பறி கொடுத்து ,புதிய குடியுரிமை சான்றிதல் பெறவும் பணத்தை கொடுத்து பறி தவிக்கும் அந்த சகோதரர் குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் சென்று தனக்கு நேர்ந்த கொடுமையை சொல்லி உதவி கேட்க அவர்களோ நீ தனியார் வக்கீலை பார்த்துக் கொள் என கைகழுவி விட்டது
நேபாளியின் தூதரகம் நேசக்கரம்
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
சவுந்தராஜ் என்பவர் நேபாளி எம்பசியில் துப்பரவு தொழிலாளியாக உள்ளார் அந்த எம்பசியில் இருந்து இந்திய தூதரகதிர்க்கு ஏன் உதவ வில்லை எனக் கேட்க ஓரளவு அவரது பிரச்சனையை அழைத்து கேட்டுள்ளனர்
தமிழக தமுமுக வின் உதவிகள்
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
ஹைக் கோர்ட்டில் வழக்கு தொடுக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப் பட்டுள்ளது
தூதரகத்திற்கு நாம் வைக்கும் கோரிக்கை
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
சவுந்தராஜ் குடும்பத்தினரை அழைத்து சென்று ஆட்சியரிடம் மனு கொடுக்கப் பட்டது நடவடிக்கை இல்லை எனில் மதுரை
;;;;;;;;;;;;;
இந்த சகோதரருக்கு இலவசமாக வழக்கறிஞரை வைத்து அந்த வழக்கை எடுத்து நடத்தி உண்மை கண்டறிந்து அப்பாவியான சவுந்தராஜ் அவர்களை நல்ல முறையில் தாயகம் அனுப்ப தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
பாதிக்கப் பட்ட
இதே போன்று பாதிக்க பட்டு யாரேனும் இருந்தாலும் அல்லது இந்த பிரச்சனைக்காக சிறையில் இருந்தாலும் அதனை கண்டறிந்து அவர்களும் விடுதலை பெற தூ தரகம் உதவ வேண்டும்
இது குறித்து அனைத்து அமைப்புகளுக்கும் சொல்லி பொது மக்களிடம் விழிப்புணவு ஏற்ப்படும் விதமாக எடுத்துரைக்க சொல்ல வழி செய்ய வேண்டும்
எதிர்காலம் வசந்தகாலமாக மாறாதா என வெளிநாடு செல்லும் மக்களுக்கு அது இருண்ட காலமாக அமைத்து விட கூடாது
உதவுமா ? இந்திய தூதரகம் ! பொறுத்திருந்து பார்ப்போம்
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது