அதிரையின் கல்வியை உயர்ந்த நிலைக்கு கொண்டு வந்ததில் அதிரை காதிர் முகைதீன் கல்லூரியின் பங்கு மிக முக்கியமானதாகும். அவ்வகையில் இந்த கல்லூரியில் அதிரை, தஞ்சை, தமிழகத்தையும் கடந்து வெளிமாநிலங்களில் இருந்து நமதூர் கல்லூரியில் மாணவர்கள் பயின்று வரும் அளவிற்க்கு இக்கல்லூரியின் சாதனைகள் ஏராளம். இக்கல்லூரிதுவங்கியதில் இருந்து பல்லாயிரக்காண மாணவர்கள் வருடா வருடம் பட்டம் பெற்று வருகின்றனர்.
அந்த வரிசையின் சென்ற ஆண்டு பட்டப்படிப்பை முடித்தவர்களுக்கான பட்டமளிப்பு விழா இன்று காலை துவங்கியது.
இதில் சிறப்பு விருந்தினர்கள், முக்கியஸ்தர்கள், பொது மக்கள், பெற்றோர்கள் மாணவர்கள் என பலர் கலந்துக்கொண்டுள்ளனர்.
பட்டம் பெற்ற மாணவர்களுக்கு அதிரைபிறை.இன் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.



அதிரை பிறை செய்திகளுக்காக அபூதாஹிர் மற்றும் அஷ்ரப்







பட்டம் பெற்ற மாணவர்கள் தங்கள் திறமைகளை மேலும் வளர்த்துகொள்ளவேண்டும். இனி நீங்கள் வேலை தேடி பல நிறுவங்களை தொடர்பு கொள்விர்கள் . அப்போது உங்களிடம் பல கேள்விகள் கேட்கப்படும். ஆங்கிலத்தில் கேள்வி கேட்பார்கள். அது மட்டும் அல்ல பக்கத்து மாநிலத்துக்கோ, அரபு நாட்டுக்கோ வேலைக்கு சென்றால் கூட ஹிந்தி தெரியுமா என்று கேட்பார்கள். மாணவர்களே நீங்கள் உங்கள் அறிவை வளர்த்து கொள்ளுங்கள். ஆங்கிலமும், ஹிந்தியும், நன்றாக தெரிந்தால் வேலை நிச்சயம் உண்டு.
ReplyDelete