முஸ்லிம்களின் தோல்வி வரலாறு !
2009 ல், 43 முஸ்லிம்கள் தோற்றக் கதை! 800 ஓட்டு வித்தியாசத்தில் தோற்ற சோகம் !!! 2009 பாராளுமன்றத்தேர்தலில்,
நமது ஒற்றுமையின்மை மற்றும்
ஒரே தொகுதியில் பல முஸ்லிம்கள்
போட்டியிட்டது போன்ற காரணங்களால், முக்கிய கட்சிகளின் சார்பில் நிறுத்தப்பட்ட 43
முஸ்லிம்கள், எம்.பி.
வாய்ப்புக்களை பறிகொடுத்துள்ளனர். கேரள மாநிலம் கோழிக்கோட்டில், 838 ஓட்டுக்கள் குறைவாகப் பெற்ற காரணத்தினால் 'முஹம்மத் ரியாஸ்' என்ற முஸ்லிம் வேட்பாளர் தோற்றுப் போனார். தற்போது, ராகவன் என்பவர்
கோழிக்கோடு எம்.பி.யாக உள்ளார்.
ராகவன் பெற்ற ஓட்டுக்கள் 3, 42, 309
முஹம்மத் ரியாஸ் பெற்ற ஓட்டு 3, 41, 471. 838 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் ஒரு முஸ்லிம் தோற்ற இத்தொகுதியில், வேறொரு முஸ்லிம் 5,000 ஓட்டுக்களைப் பிரித்தார்
என்பதே அவரது சாதனையாக சொல்லிக் கொண்டிருக்கிறார் 2009 தேர்தல் முடிவுகள் சம்மந்தமாக, 8 மாநிலங்களை ஆய்வு செய்த நாம்,
ஒற்றுமையின்மை காரணமாக 43 முஸ்லிம்கள் தோல்வியடைந்த விபரங்களை சேகரித்துள்ளோம்.
கேரளாவில் 1, ஆந்திராவில் 3, கர்நாடகத்தில் 3, பீகாரில் 8, குஜராத்தில் 5, ஜார்கண்டில் 2, மகாராஷ்டிரத்தில் 2, ராஜஸ்தானில் 2, உத்தரப் பிரதேசத்தில் 17, என மொத்தம் 43
தொகுதிகளில் முஸ்லிம்களின்
தோல்வி வரலாற்றைப் பதிவு செய்துள்ளேன். ஒவ்வொரு தொகுதியிலும் முஸ்லிம்கள் பெற்ற வாக்குகள் எவ்வளவு, தோல்விக்கான காரணம் என்ன என்பதை, தேர்தல் கமிஷனின்
அதிகாரப்பூர்வ ஆவணங்கள் மூலம்
நிரூபிக்கவுள்ளேன்.
இதனை ஒரே பதிவாக வெளியிடுவதில் சிரமம் உள்ளதால், "முஸ்லிம்களின் தோல்வி வரலாறு"
என்றப் பெயரில் பல பாகங்களாக
வெளியிடவுள்ளேன். நம்மிடம் ஒற்றுமையின்மை காரணாமாக பல இடங்களில் நமது எதிரிகள் வெற்றிப் பெற்று, நாடாளுமன்றத்தில் கோலோச்சி வருவதையும் "மறுப்பு" பக்கத்தில் படம் பிடித்து காட்டவுள்ளேன். தினம் 2 பதிவுகள் என தேர்தல் முடிவதற்குள் எல்லாவற்றையும் மக்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கவுள்ளேன்.
[Source-Maruppu inaiyam]
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது