திருச்சியில் ஒரு இஸ்லாமிய பள்ளியில் பயிலும் மாணவி +2 தேர்வு எழுத வேறொரு பள்ளிக்கு சென்றுள்ளார். அந்த பள்ளியில் தேர்வு நடத்தும் ஆசிரியர் அந்த மாணவி புர்காவுடன் தேர்வு எழுத தடை விதித்தார். அந்த மாணவியோ புர்காவை கழற்ற மாட்டேன் என்று விவாதம் செய்துள்ளார்.
இதனையடுத்து அந்த மாணவி பயிலும் பள்ளியின் தாளாளர் இந்த பிரச்சனையில் தலையிட்டு Human Guidance and Welfare Center, Chennai கோர்ட்டில் வழக்கு தொடுத்தார். இறைவனின் கிருபையால் தேர்வு எழுதுவதற்க்காக இஸ்லாமிய அடையாளமான புர்காவை கழற்ற தேவையில்லை என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதில் நமக்கு சில படிப்பினைகள் உள்ளது. அந்த மாணவி எதிர்பேச்சு பேசாமல் அமைதியாக இருந்திருந்தால் ஆசியர்களுக்கு இஸ்லாமிய துவேசத்துடன் அடக்கு முறையை அதிகரிக்க வாய்ப்புள்ளது. நபி வழிப்படி தீமையை கையாலோ ,வாயாலோ எதிர்த்தால் தூய இஸ்லாத்தை நம்மால் பின்பற்ற முடியும்.
ஆசிரியர்களுக்கு பயந்து புர்கா அணியாமல் பள்ளிக் கூடங்களுக்கு அனுப்பும் பெற்றோர்கள் இனி ஹிஜாப்பை அணிந்து பயமின்றி அனுப்பலாம்"
NEWS BY Riyas Siraj


1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது