மோடியை தோற்கடிக்க 'பொது வேட்பாளர்' : கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக அனைவரும் வாபஸ்!

0

வாரனாசியில், நரேந்திர மோடிக்கு எதிராக,
பலமான ஒரு பொது வேட்பாளரை நிறுத்த
மதசார்பற்ற தலைவர்கள் அனைவரும், ஒத்தக்
கருத்துடன் முயற்சித்து வருகின்றனர்.
முன்னதாக, 'கவ்மி ஏக்தா தள்' (QED) சார்பாக
முக்தார் அன்சாரி நிறுத்தப்படுவதை அறிந்த
முலாயம் சிங், தனது வேட்பாளரை வாபஸ்
பெற்றுக் கொண்டு, முக்தார்
அன்சாரியை ஆதரிப்பதாகக் கூறினார்.
தற்போது, மோடியை தோற்கடிக்க எந்த
தியாகத்தையும் செய்யத்தயார் என,
'கவ்மி ஏக்தா தள்' கட்சியின் தலைவர் அத்ஹர்
ஜமால் கூறியுள்ளார்.
மோடியை தோற்கடிக்க 'ஆம்
ஆத்மி கட்சி'யின் அர்விந்த் கேஜ்ரிவால் தான்
பலமான வேட்பாளர் என்றால்,
அவருக்கு ஆதரவாக அன்சாரியை தாங்கள்
வாபஸ் வாங்கவும் தயார், என்கிறார், அத்ஹர்
ஜமால்.
மோடிக்கு எதிராக பொது வேட்பாளராக
கேஜ்ரிவால் நிறுத்தப்பட்டால்,
மோடிக்கு தோல்வி உறுதி என, கடும்
அச்சத்தில் உள்ளனர், பாஜகவினர்.

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)