அதிரையில் காதிர் முகைதீன் பள்ளியில் +2 தேர்வு துவங்கியது

0

தமிழ்நாட்டில் பிளஸ்–2 தேர்வு இன்று தொடங்கியது. 8 லட்சத்து 75 ஆயிரம் மாணவ–மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள்.

பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் தேர்வு இது. இந்த மதிப்பெண் தான் உயர் கல்விக்கு அடித்தளமாக அமையும்.

எனவே மாணவ– மாணவிகள் கடினமாக உழைத்து தேர்வுக்கு தயாராகி உள்ளனர். காலை 9 மணிக்கே தேர்வு மையங்களுக்கு மாணவ–மாணவிகள் வரத் தொடங்கினார்கள். காலை 10.15 மணிக்கு தேர்வு தொடங்கி மதியம் 1.15 மணிக்கு முடிவடைகிறது.

முதல் நாளான இன்று தமிழ் முதல் தாள் தேர்வு நடந்தது. 5–ந் தேதி (புதன்) தமிழ் 2–ம் தாள், 6–ந் தேதி (வியாழன்) ஆங்கிலம் முதல் தாள், 7–ந் தேதி (வெள்ளி) ஆங்கிலம் 2–ம் தாள், 10–ந்தேதி (திங்கள்) இயற்பியல், பொருளாதாரம், 13–ந்தேதி (வியாழன்) வணிகவியல், புவியியல், மனையியல், 14–ந் தேதி (வெள்ளி) கணிதம், விலங்கியல், நுண்ணுயிரியல், ஊட்டச்சத்து, 17–ந் தேதி (திங்கள்) வேதியியல், கணக்கு பதிவியல், 20–ந் தேதி (வியாழன்) உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம், 24–ந் தேதி (திங்கள்) அரசியல் அறிவியல், நர்சிங், புள்ளியியல், தொழிற்கல்வி தேர்வுகள் 25–ந் தேதி (செவ்வாய்) கணினி அறிவியல், உயிரி–வேதியியல், இந்திய கலாச்சரம், கம்யூனிகேடிவ் இங்கிலீஷ், சிறப்பு தமிழ், தட்டச்சு (தமிழ், ஆங்கிலம்) நடைபெறுகிறது.

மாணவர்கள் தேர்வு எழுதுவதற்காக 2 ஆயிரத்து 242 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. தேர்வு மையங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தேர்வு அறைகளில் மாணவர்கள் முன்னிலையில் வினாத்தாள் கட்டுகள் பிரிக்கப்பட்டு வினாத்தாள்கள் வழங்கப்பட்டன.

தேர்வு அறைகளில் மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்கவும், முறைகேடுகள் நிகழாமல் தடுக்கவும் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள் தலைமையில் மாநிலம் முழுவதும் 4000 பேரை கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.

இதை தவிர கலெக்டர்கள், மாவட்ட வருவாய் அதிகாரிகள், ஆர்.டி.ஓ., தாசில்தார் தலைமையிலான சிறப்பு பறக்கும் படையினரும் தேர்வு மையங்களில் திடீர் சோதனை மேற்கொள்கிறார்கள்.

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)