உ.பி யில் 19 முஸ்லிம்கள், 21 பிராமணர்களுக்கு வாய்ப்பு !!!

0

BSP'யின் வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு பாஜக'வுடன் ஒருபோதும் சேரமாட்டேன் என்று குறிய
மாயாவதி !
19 முஸ்லிம்கள், 21 பிராமணர்களுக்கு
வாய்ப்பு. 80 தொகுதிகளைக் கொண்ட உத்தரப்பிரதேச
வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட 'பகுஜன்
சமாஜ் கட்சி'யின் தலைவர் மாயாவதி,
தேர்தலுக்கு பின்பு எந்த நிலை வந்தாலும்,
பாஜகவோடு அணி சேரமாட்டேன் என
உறுதி படக்கூறினார்.
17 தனித்தொகுதிகள் போக, மீதமுள்ள 63
தொகுதிகளில் மாநிலத்தின் மிகப் பெரும்
சமூகமான முஸ்லிம்களுக்கு 19
சீட்டுக்களை வழங்கிய மாயாவதி, 9%
மட்டுமே உள்ள பிராமணர்களுக்கு 21
சீட்டுக்களை வாரி வழங்கியுள்ளார்.
இதரப் பிற்பட்ட பிரிவுகளை சேர்ந்த 15
நபர்களுக்கும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
7 பெண்களும் 'பிஎஸ்பி'யின் சார்பில்
களத்தில் இறக்கப்பட்டுள்ளனர்.
வேட்பாளர் பட்டியல் வெளியீட்டின்
போது செய்தியாளர்கள் கேட்ட
கேள்விகளுக்கும் மாயாவதி பதிலளித்தார்.
பாஜகவுடன் கூட்டணி என்ற
பேச்சுக்கே இடமில்லை எனக்கூறிய அவர், தான்
ஏற்கனவே அவர்களோடு கூட்டணி சேர்ந்தது இமாலயத்தவறு என்றார்
அவர்.
ஜெயலலிதா மற்றும்
மம்தா பானர்ஜியோடு கூட்டணி சேர்வீர்களா எனக்
கேட்டபோது, தற்போது அதற்கான அவசியம்
எழவில்லை என்றார், மாயாவதி.

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)