தஞ்சை தொகுதி திமுக வேட்பாளர் டிஆர்.பாலு அவர்களின் பிறப்பு மற்றும் சாதனைகள் !!!!!

0
  


               தஞ்சை தொகுதி திமுக வேட்பாளராக டிஆர்.பாலு  அறிவிக்கப்பட்டுள்ளார். இவரது சொந்த ஊர் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த தளிக்கோட்டை. தந்தை ராசுத்தேவர், தாயார் வடிவம்மாள். இவருக்கு ரேணுகாதேவி, பொற்கொடி என்ற 2 மனைவிகள். டிஆர்பி.ராஜ்குமார், டிஆர்பி.ராஜா, டிஆர்பி.செல்வக்குமார் என்ற மகன்கள் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். இவரது மகன் டிஆர்பி.ராஜா மன்னார்குடி எம்எல்ஏவாக உள்ளார்.
       
        டிஆர்.பாலு தனது 16வது வயதிலேயே அரசியல் வாழ்க்கையை துவங்கியவர். சென்னை புது கல்லூரியில் பிஎஸ்சி, மத்திய பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ பட்டம் பெற்றார். திமுக நடத்திய பல்வேறு சமூகநீதி போராட்டங்களில் கலந்து கொண்டு பலமுறை சிறை சென்றவர். அவர் திமுகவில் ஒருங்கிணைந்த சென்னை மாவட்ட செயலாளராக பதவி வகித்துள்ளார். 1986ம் ஆண்டு முதல் 1992ம் ஆண்டு வரை ராஜ்யசபா உறுப்பினராக இருந்தார். அன்று முதல் மறைந்த மத்திய அமைச்சர் முரசொலி மாறனுக்கு உறுதுணையாகவும், தனது ரோல்மாடலாகவும் எடுத்து கொண்டு பாராளுமன்ற பணிகளை கவனித்து வந்தார். இதைதொடர்ந்து 1996, 1998, 1999, 2004, ஆகிய தேர்தல்களில் தென்சென்னை தொகுதியிலும், 2009 தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
1996 முதல் 98ம் ஆண்டு வரை, 1999 முதல் 2003 வரை சுற்றுச்சூழல்துறை அமைச்சர், 2004 முதல் 2009 வரை மத்திய கப்பல் போக்குவரத்து மற்றும் தரைவழி போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர், 2009ம் ஆண்டு முதல் ரயில்வே நிலைக்குழு தலைவர் உள்ளிட்ட பல பதவிகளை வகித்துள்ளார்.

  
          மத்திய தரைவழி போக்குவரத்து அமைச்சராக இருந்தபோது டிஆர்.பாலு முயற்சியில் தமிழகத்தில் 777 கிலோமீட்டர் தூரத்திற்கு தேசிய நெடுஞ்சாலை அமைத்து கொடுத்தார். பல்லாயிரம் கோடிக்கு திட்டம் வகுத்து கத்திபாரா மேம்பாலம், பாடி மேம்பாலம் உள்ளிட்ட பல மேம்பாலங்கள், தமிழகம் முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகள், தங்க நாற்கர சாலைகள் போன்றவற்றை மத்திய அரசிடமிருந்து கேட்டு பெற்று சுதந்திரத்திற்கு பிறகு தமிழகத்தை மறுகட்டமைப்பு செய்து கொடுத்தவர் என்ற பெருமை பெற்றவர். மேலும் அண்ணா, பெரியார் கண்ட கனவு திட்டமான சேதுசமுத்திர திட்டத்தை கொண்டு வருவதற்கு முன்முயற்சி எடுத்ததன் பலனாக பிரதமரே மதுரைக்கு வந்து திட்டத்தை துவக்கி வைத்தார்.

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)