
தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் தங்கள் வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்து தேர்தல் பிரச்சாரத்தை துவங்கியுள்ள நிலையில் தற்பொழுது காங்கிரஸ் கட்சியும் தமிழகத்தில் 30 தொகுதிகளில் போட்டியிடும் தங்கள் வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்துள்ளது.
தஞ்சை நாடாளமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக டாக்டர் கிருஷ்ணசாமி வாண்டயார் அவர்கள் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் தஞ்சை மாவட்டம் பூண்டி என்ற கிராமத்தில் பிறந்தார். இவர் தந்தை துளசியய்யா வாண்டையார். இவர் தஞ்சை மாவட்ட காங்கிரஸ் தலைவராகவும் இருந்து வருகிறார். இவர் TKV பேரவை என்னும் அமைப்பை நடத்திவருகிறார்.
மற்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்கள்:
மத்திய சென்னை - சி.டி. மெய்யப்பன்
ஸ்ரீபெரும்புத்தூர் - அருள் அன்பரசு
காஞ்சிபுரம் - பி.விஸ்வநாதன்
அரக்கோணம் - நேசை ராஜேஷ்
வேலூர் - ஜெ.விஜய் இளஞ்செழியன்
திருவண்ணாமலை - ஏ.சுப்பிரமணியம்
ஆரணி - எம்.கே.விஷ்ணு பிரசாத்
கள்ளக்குறிச்சி - ஆர்.தேவதாஸ்
சேலம் - மோகன் குமாரமங்கலம்
நாமக்கல் - ஜி.ஆர்.சுப்பிரமணியம்
ஈரோடு - பி.கோபி
திருப்பூர் - ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்
நீலகிரி (தனி) - பி.காந்தி
கோவை - ஆர்.பிரபு
திண்டுக்கல் - என்.எஸ்.வி. சித்தன்
திருச்சி - எஸ்.எம்.டி. சாருபாலா தொண்டைமான்
பெரம்பலூர் - எம்.ராஜசேகரன்
கடலூர் - கே.எஸ்.அழகிரி
சிதம்பரம் (தனி) - டாக்டர் பி.வள்ளல் பெருமாள்
மயிலாடுதுறை - மணிசங்கர் அய்யர்
நாகப்பட்டினம் (தனி) - டி.ஏ.பி. செந்தில் பாண்டியன்
சிவகங்கை - கார்த்தி ப.சிதம்பரம்
மதுரை - பி.என்.பாரத் நாச்சியப்பன்
தேனி - ஜே.எம். ஆருண் ரஷீத்
விருதுநகர் - மாணிக்கம் தாகூர்
ராமநாதபுரம் - திருநாவுக்கரசர்
தூத்துக்குடி - எ.பி.சி.வி. சண்முகம்
தென்காசி - டாக்டர் கே.ஜெயக்குமார்
திருநெல்வேலி - எஸ்.எஸ். ராமசுப்பு
இதில், மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், ஜி.கே.வாசன் உள்ளிட்ட மூத்த தலைவர்களின் பெயர்கள் இடம்பெறவில்லை.

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது