அதிரையில் வரும் நாடாளமன்ற தேர்தலுக்கு தி.மு.க தலைமையிலான கூட்டனியை ஆதரித்து தி.மு.க கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்தார். இந்த கூட்டத்தில் அதிரை தி.மு.க, ம.ம.க, முஸ்லிம் லீக், விடுதலை சிறுத்தை ஆகிய கட்சியை சார்ந்த தொண்டர்களும், அதிரை பொதுமக்களும் கலந்துக்கொண்டனர்.
முன்னதாக தி.மு.க கூட்டனியை ஆதரித்து முஸ்லிம் லீக் ஹாஜா அவர்களும், அதிரை பேரூராட்சி தலைவர் அவர்களும் உரை நிகழ்த்தினார்கள்
மாலை 6:50 மணியளவில் நமதூர் பேருந்து நிலையத்திற்கு வருகை தந்த மு.க.ஸ்டாலின் அவர்கள் கடந்த தி.மு.க ஆட்சியின் சாதனைகளை விளக்கி தஞ்சை நாடாளமன்ற தொகுதி வேட்பாளர் திரு.டி.ஆர். பாலு அவர்களை ஆதரித்து வாக்குகள் சேகரித்தார். அதிரை வழிநெடுகிளும் சூழ்ந்திருந்த ஆதரவாளர்கள் இவர்களுக்கு உற்ச்சாக வரவேற்ப்பளித்தனர்.













1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது