அதிரை அருகே உள்ள பள்ளிக்கொண்டான் கிராமத்தில் காட்டாறு செல்கிறது. சம்பவத்தன்று இரவு 10 மணி அளவில் பள்ளிகொண்டான் கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன் (வயது48), சித்திரவேலு (30) ஆகிய இருவரும் இந்த ஆற்றில் இருந்து அனுமதியின்றி டிராக்டரில் மணல் அள்ளிக்கொண்டு வந்ததாக தெரிகிறது. இது குறித்து அதிராம்பட்டினம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அதிராம்பட்டினம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் பசுபதி போலீசாருடன் விரைந்து சென்று டிராக்டரை தடுத்து நிறுத்தி சோதனையிட்டார்.
அப்போது அரசு அனுமதி இல்லாமலும் உரிமம் இல்லாமலும் மணல் அள்ளி வந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் டிராக்டரை கைப்பற்றி சுப்பிரமணியன், சித்திரவேலு ஆகிய 2 பேரையும் கைது செய்து பட்டுக்கோட்டை குற்றவியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர்களை காவலில் வைக்க மாஜிஸ்திரேட் மோகனா உத்தரவிட்டார்.

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது