பிரான்ஸ் நாட்டு சிறைகளில் உள்ள முஸ்லிம் கைதிகளுக்கு, “ஹலால்’ உணவு வழங்க, அந்நாட்டு நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.. பிரான்ஸ் நாட்டு, சிறைகளில், கைதிகளுக்கு சைவ உணவு அல்லது பன்றி இறைச்சியுடன் கூடிய உணவு வழங்கப்படுகிறது. ஆனால், முஸ்லிம் கைதிகள், தங்கள் மத சம்பிரதாயத்துக்கு எதிரான, பன்றி இறைச்சியை மறுத்ததால், சைவ உணவு வழங்கப்பட்டு வருகிறது. பாரம்பரிய, “ஹலால்’ உணவை வழங்க வேண்டும் என, அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அரசு ஒப்புக் கொண்டது.
“முஸ்லிம் கைதிகளுக்கு ஹலால் உணவு வழங்க வேண்டும் என்றால், தனியாக சமையல்காரர்களை நியமிக்க வேண்டியிருக்கும்’ என, சிறை நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து, ஹலால் உணவு வழங்கக் கோரி, முஸ்லிம் கைதிகள் வழக்கு தொடர்ந்தனர். வெளியில் இருந்து, ஹலால் உணவை வாங்கிக் கொள்ளலாம் என்று, அரசு தரப்பில் கூறியதை அடுத்து, முஸ்லிம் கைதிகளுக்கு,, ஹலால் உணவு வழங்க, அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
courtesy: france24.com


1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது