இன்று காலை துபாயிலிருந்து மும்பைக்கு வந்த எமிரேட்ஸ் விமானம் ஒன்று தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மும்பையில் அவசரத் தரையிறக்கம் செய்யப்பட்டது. 231 பயணிகளுடன் துபாயிலிருந்து கிளம்பிய ஈகே-506 என்ற எமிரேட்ஸ் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு இருப்பதாக விமானி சந்தேகித்தார். இதனால் மதியம் 2.12 மணிக்கு மும்பையில் வந்து இறங்கவேண்டிய சமயத்தில் அவசரத் தரையிறக்கத்திற்கு அனுமதி கோரி அவர் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்திற்குத் தகவல் அனுப்பினார்.
இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு விதிமுறைகளின்படி தீயணைப்பு மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் விமானம் தரையிறங்கும் இடத்தின் அருகே தயார்நிலையில் வைக்கப்பட்டன. அதன் பின்னர் விமானம் பத்திரமாக 2.20 மணிக்கு அவசரத் தரையிறக்கம் செய்யப்பட்டது.
தகவல்: மாலை மலர்


1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது