அதிரையில் நாளை பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்காக துஆ செய்வோம்..!

0

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு துவங்க உள்ளது, தற்பொழுது மாணவர்கள் முழுமூச்சுடன் படித்துக்கொண்டிருப்பார்கள். 

வாசகர்களுக்கு..

இந்நிலையில் பொதுமக்களான நாம் நமதூர் மாணவர்கள் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்று வெற்றியடையவும், அவர்கள் எழுதும் தேர்வுகளில் எளிமையான கேள்வித்தாள் அமைவதற்க்கும், நமதூர் மாணவர்கள் மாநில அளவில் சாதனை படைப்பதற்க்கும் இறைவன் அருள்புரிவானாக. என்றும் நாம் அனைவரும் துஆ செய்வோம்.

பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு..

மேலும் உங்கள் உறவினர்கள், நண்பர்கள் யாராவது பொதுத்தேர்வை நாளை பொதுத்தேர்வை எழுத இருந்தால் அவர்களை சந்த்தித்து ஊக்கப்படுத்தி அவர்களுக்கு மன தைரியத்தை அளிக்க வேண்டும்.

மாணவர்கள் இச்சமயம் மிகுந்த பதட்டத்துடன் இருப்பார்கள், எனவே பெற்றோர்கள் அவர்களை படி படி என்று சொல்லாமல் அவர்களை சிறிது ஓய்வெடுக்க விட்டு பின்னர் படிக்க சொல்லுங்கள். மேலும் அவர்களுக்கு சத்தான உணவுகளை கொடுங்கள். 

மாணவர்களுக்கு....

மாணவர்கள் இரவு முழுவதும் கண்விழித்துப் படிக்காமல் உடனே தூங்கிவிட்டு காலை 4 மணிக்கெல்லாம் எழுந்து படித்தால் நல்லது. மேலும் தூக்கத்தை குறைத்துக்கொண்டு கண்விழித்துப் படிக்க வேண்டாம். தேர்வுக்கும் ஒரு மணி நேரத்திற்க்கு முன்னர் மாணவர்கள் புத்தகத்தை வைத்துவிட்டு சிறிது நேரம் ஓய்வெடுத்து தேர்வரைக்கு செல்லுங்கள். 

தேர்வரையில்...

தேர்வரைக்கு சென்றவுடன் தங்கள் இடத்தில் அமர்ந்து இறைவனிடம் துஆ செய்து பொருமையுடன் கேள்வித்தாளை பெற வேண்டும். கேள்வித்தாள் எளிமையாக இருந்தாலும் கடினமாக இருந்தாலும் அதில் உங்களுக்கு நன்கு அறிந்த கேள்வியை முதலில் எழுத வேண்டும். 

மாணவர்கள் தேர்வரையில் கலர் பேனா, கலர் பென்சில், பெல்ட்,  சூ ஆகியவற்றை கொண்டு செல்வதற்க்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பொதுத்தேர்வை நொக்கியிருக்கும் மாணவர்களுக்கு அதிரை பிறை சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)