அதிரை காதிர் முகைதீன் பள்ளியில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிரியப் பணியை மிகச் சிறப்பாக செய்து வந்துக்கொண்டிருந்த முதுகலை ஆசிரியர் ஹாஜி முஹம்மது சார் அவர்கள் இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார்.
இதனை அடுத்து அவருக்கு பிரியா விடை கொடுக்கும் விதமாக அப்பள்ளி ஆசிரியர்கள் சார்பாக ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்ப்பாடு செய்யப்பட்டது. தலைமை ஆசிரியர் மஹ்பூப் அலி அவர்களின் தலைமையில் இன்று மாலை நடைப்பெற்ற இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட ஆசிரிய ஆசிரியைகள் ஹாஜி சார் அவர்களுடன் தாங்கள் பணியாற்றிய நெகிழ்ச்சியான அனுபவங்களைப் பகிர்ந்துக்கொண்டனர்.
இதில் கலந்துக்கொண்ட பல ஆசிரியர்கள் ஹாஜி சார் அவர்களின் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் தலைமை ஆசிரியர் மஹ்பூப் அலி அவர்கள் ஹாஜி சார் அவர்களுக்கு பொன்னாடை போற்றி கவுரவித்தார்கள்.
இறுதியாக உரையாற்றிய ஹாஜி சார் அவர்கள் தன்னுடைய முழு வரலாற்றையும், இப்பள்ளியில் பணியாற்றிய அனுபவங்களைப் பற்றியும், ஆசிரியர்களைப் பற்றியும், அதிராம்பட்டினத்தைப் பற்றியும் நெகிழ்சியுடன் உரையாற்றினார்கள். இதை கேட்ட அனைவருக்கும் கண்ணில் கண்ணீர் வரும் அளவுக்கு இருந்தது உரை.
நானும் அவருடைய மாணவன் என்ற முறையில் பல ஆண்டுகாலமாக அதிரை மக்களுக்கு கல்விச்சேவையாற்றிய அவருடைய இம்மை மறுமை நலனுக்காக பிரார்த்திப்பதோடு அல்லாஹ் அவர்களுக்கு இனி வரும் காலங்களை பொன்னான காலமாகவும், நோய் நொடியில்லாமல் நல்ல சுகத்துடன் வாழ துஆ செய்வோம்..









பதிவுக்கு நன்றி.
ReplyDeleteஅருமையான விளக்கம்.
அந்தந்த மாணவர்களுக்கு அவரவரர் ஆசிரியர்கள் மகத்தானவர்கள், எங்களுடைய பள்ளி வாழ்க்கையில் மறக்கமுடியாத எத்தனையோ ஆசிரியர்கள் இருந்தாலும் தினமும் சாலையில் போகும்போது "ஹாஜி ஜனாப் ஹாஜா மொய்தீன் சார் அவர்கள், திரு ரெங்கராஜ் சார் அவர்கள்" இவர்களை அடிக்கடி சந்திப்பதுண்டு, உடம்புக்கு வயசு கூடினாலும், நினைவலைகள் இன்றும் இளமையாக இருக்கின்றது.
வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த/பெ. மர்ஹூம். K. முஹம்மது அலியார்.
உரிமையாளர். அதிரை 13 வாடி, வண்டிப்பேட்டை.
அவரிடம் பாடம் பயின்ற என்னை போல் முன்னால் மாணவர்கள் ஹாஜி முஹமது சாரை பற்றி தினமும் உலகில் ஏதோ ஒரு மூலையில் அவரை பற்றி பேசிக்கொண்டு இருப்பார்கள். காரணம் அவர் கல்வியை சொல்லும் முறை தனித்துவம் வாய்ந்ததே காரணம். அவர் மனதில் பதியவைக்க கூறும் விளக்கம் என்றும் மறக்கமுடியாதது. உதாரணமாக பொருளியல் பாடத்தில் பகுதி கீழே, தொகுதி மேலே என்பதை நினைவில் வைக்கவேண்டும் அதற்கு அவர் சொன்ன ஒரு உவமை, ஒரு விவசாயி வயலுக்கு செல்லும்போது பழையசோறு எடுத்து போவான் அந்த பத்திரத்தில் மூடி மேல்பரப்பில் தொவையல் வைத்திருப்பான் இப்போ நினைவு வைத்துகொள்ளுங்கள் பழையது ( பகுதி )கீழே தொவையல் (தொகுதி) மேலே என்று சொல்லித்தந்தார் இன்னும் அது மறக்கவில்லை. இப்படி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். அவர் மாணவருக்கு கல்வி கற்று கொடுக்கும் முறையை எல்லா ஆசிரியரும் அறிந்து அவரை போல் பாடம் நடத்த முன்வரவேண்டும். அவர் இந்த பள்ளியை விட்டு செல்வது மாணவர்களுக்கு பேரிழப்பு. எல்லாம் வல்ல அல்லாஹ் அவரின் நீண்ட ஆயுலுக்கும், மறுமை வாழ்வு சிறக்கவும் இந்த நேரத்தில் நாம் ஹாஜி முஹம்மது சாருக்கு வேண்டி துஆ செய்வோம்.
ReplyDeleteஹாஜி சாரின் கைபேசி விவரம் கிடைத்தால் என்னை போன்ற முன்னால் மாணவர்கள் வெளிநாட்டில் இருந்து அழைத்து பேச ஏதுவாக இருக்கும். யாராவது பதிவிடுக
ReplyDelete