மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய மாணவர்கள் கைது ! புகைப்படங்கள்

Unknown
1

            
              மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கிண்டி பேருந்து நிலையம் அருகே மோடி செல்லும் வழியில் கறுப்புக் கொடி காட்டி பின் 15 நிமிடம் சாலை மறியலில் ஈடுபட்டனர் .

தமிழ்நாட்டின் உயிர் துடிப்பான காவிரி பிரச்சனைக்கும் , தமிழக மீனவர்கள் நாளும் செத்து மடிவதைப்பற்றியும் , தமிழீழத்தைப் பற்றியும் , தமிழர் நலன் சார்ந்த எல்லாவற்றையும் தேர்தல் அறிக்கையில் மவுனம் சாதித்து காங்கிரசை போலவே செயல்படும் பா.ஜ.க வை தமிழ் நாட்டில் நுழையவிடமாட்டோம் என இப்போரட்டத்தின் மூலம் எச்சரித்துள்ளனர். இந்த போராட்டத்தில்

தமிழ் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் கூட்டமைப்பு,
கேம்பஸ் ஃபிரண்ட் ஆப் இந்தியா,
முற்போக்கு மாணவர் முன்னணி ,
தமிழ்நாடு மாணவர் இயக்கம்,
ஆகிய மாணவ இயக்கங்களைச் சேர்ந்த இருநூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் இப்போராட்டத்தில் கலந்து கொண்டு தமிழகத்தின் எதிர்ப்பை பதிவு செய்து கைதாகியுள்ளனர்.



-பா.ஜ.க விற்கு எதிரான மாணவர்கள்

Post a Comment

1Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

  1. எப்பா நரேந்திர மோடி குஜராத்தை கலவர பூமியா ஆகிட்ட. இப்ப தமிழ் நாட்டையும் கலவர பூமியா ஆக்க போறியா. ஏன் நாங்க நல்லா இருக்கிறது உனக்கு பிடிக்கவில்லையா. நீ சென்னை வந்தால் தமிழ் நாடு அமைதி பூங்காவாக இருக்காது கலவர பூமியாக மாறும். அதனால நீ சென்னை வராதே.

    ReplyDelete
Post a Comment