முத்துப்பேட்டையில் பைக் மோதி ஒரு வயது குழந்தை பலி

0

முத்துப்பேட்டையில்  பஸ்சிலிருந்து இறங்கியபோது பைக் மோதி, ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று  தாயுடன் வந்த ஒருவயது குழந்தை பலியானது. தாய், பைக் ஓட்டி வந்தவர் காயமடைந்தனர்.
முத்துப்பேட்டை  உப்பூர் மில்லடி தெருவை சேர்ந்தவர் பாஸ்கர்(35).  இவரது  மனைவி விரோஜா (22).  இவர்களுக்கு ஒரு வயதில் ஹரிபிரியா என்ற பெண் குழந்தை இருந்தது. குழந்தைக்கு நேற்று முன்தினம் உடல்நிலை சரியில்லாததால் விரோஜா, குழந்தையை திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு  கொண்டு சென்றார். அங்கு சிகிச்சை முடிந்ததும் குழந்தையுடன் வீட்டுக்கு பஸ்சில் வந்துகொண்டிருந்தார்.
உப்பூர் மில்லடி நிறுத்தத்தில் அவர் பஸ்சிலிருந்து இறங்கினார். அப்போது முத்துப்பேட்டை ஆள்காட்டு வெளியை  சேர்ந்த ஆரோக்கியசாமி ஓட்டி வந்த பைக், விரோஜா மீது மோதியது. இதில்  குழந்தை,  விரோஜா,  ஆரோக்கியசாமி  ஆகியோர்  கீழே  விழுந்து படுகாயமடைந்தனர்.
முத்துப்பேட்டை  போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகவேல், எஸ்ஐ இளங்கோவன் மற்றும் போலீசார் அங்கு சென்று 3 பேரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.  இதில்  சிகிச்சை  பலனின்றி  குழந்தை  ஹரிபிரியா இறந்தது.
சரோஜா, ஆரோக்கியசாமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து  விசாரித்து  வருகின்றனர்.
Source Muthupetnews

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)