அதிரையில் கடந்த நான்கு நாட்களாக குடிநீர் வழங்காததை கண்டித்து அதிரை ஷிஃபா மருத்துவமனை பின்புறமாக வசிக்கும் காலனி வாசிகள் இன்று இரவு 8.30 மணியளவில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றது. சுமார் 50க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன் அங்கு பரபரப்பும் ஏற்ப்பட்டது.


மின்சாரம் இருந்தால் தான் மோட்டார் இயங்கும். மோட்டார் இயங்கினால்தான் குடிநீர் விநியோகிக்கமுடியும். இங்கு பிரச்சனையே மின்சாரம்தான். இந்த பிரச்சனை அதிராம்பட்டினத்தில் மட்டும் அல்ல தமிழ் நாடு முழுவதும் இருக்கு. தமிழக அரசே எங்களுக்கு தடையில்லா மின்சாரம் வேண்டும்.
ReplyDelete