புதிய ரேசன் கார்டுகள் வரும் ஜீன் மாதம் முதல் விநியோகம்

0
தமிழகத்தில் புதிய குடும்ப அட்டைகள் வருகின்ற ஜுன் மாதம் முதல் விநியோகம் செய்யப்பட உள்ளது.

இதுகுறித்து குடிமைப்பொருள் துறை சார்பில் வெளியான தகவலில், ''நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட தேதியில் இருந்து நடத்தை விதி அமலில் இருந்ததால், புதிய ரேஷன் அட்டைகள் வழங்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

தமிழகத்தில் வாக்குப்பதிவு கடந்த 24 ஆம் தேதி முடிந்த நிலையில், நடத்தை விதிகளை தளர்த்தி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதையடுத்து, புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தவர்களின் மனுக்களை பரிசீலனை செய்யும் பணி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.


அச்சிடும் பணி முடிந்தவுடன் ஜுன் மாதத்தில் புதிய குடும்ப அட்டைகள் வழங்கும் பணி நடைபெறும்" என்று கூறப்படுகிறது.
தகவல்: நியூஸ் அலை

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)