மதுக்கூரில் நேற்று இரவு சரியாக 9.08PM மணியளவில் டிரான்ஸ்ஃபார்மர் டமார் என்ற பயங்கர சப்தத்துடன் வெடித்து சிதறியது. இதன் விளைவாக நேற்று இரவு முதல் அதிரையில் மின் தடை ஏற்ப்பட்டது. இதனால் வெறுப்படைந்த அதிரை பொது மக்கள் அதிரை மின் வாரிய நிலையத்திற்க்கு தொலைப்பேசியில் தொடர்புக் கொண்ட வண்ணம் இருந்தனர்.
பின்னர் மதுக்கூர் மின் வாரியத்துறையினர் நீண்ட நேரம் அந்த டிரான்ஸ்ஃபார்மரை சரி செய்து இன்று காலை 7:30AM மணியளவில் மின் விநியோகம் அளித்தனர்.

மதுக்கூரில் அடிக்கடி டிரான்ஸ்ஃபார்மர் பழுதாகிறது. டிரான்ஸ்ஃபார்மரில் உள்ள சாதனம் அனைத்தும் பழையதாக போய்விட்டதின் காரணமாக இந்த விபத்து அடிக்கடி நடைபெறுகிறது. புதிய சாதனத்தை பொருத்தினால் இந்த மாதிரியான விபத்து நடக்காது. ஆகையால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கைகள் எடுப்பார்களா.
ReplyDelete