அதிரை கடைதெருவில் புதிதாக அமைத்து வரும் சாலை பணி தீவிரமாக நடந்து வருகின்றது. இந்நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்னாள் சில இடங்களில் அமைத்திருந்த சாலை சரியாக அமைக்கப்பட வில்லை என்றும் . சாலை ஓர கழிவு நீரும் இதில் கலப்பதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.
"செய்வதை திருந்த செய்" என்ற பொன்மொழியை கேள்விப்பட்டிருப்போம். நமதூரில் பெரும்பான்மையான மக்களின் பல நாள் கோரிக்கையான இது தாமதாக நிறைவேற்றப்படுவதுடன் தரமின்றியும் அமைக்கப்படுகிறது. இப்பொழுது அமைக்கப்பட்டுள்ள இந்த சாலையில் லேசாக தேய்தால் கூட ஜல்லிக் கற்க்கள் பெயர்ந்துக்கொண்டு வருகிறது. இது போன்று சாலை அமைத்தால் லேசான மழைக்கு கூட இந்த சாலை தாக்குப்பிடிக்காது.
இது போன்று வேண்டா வெறுப்பாக தங்கள் வேலையை பணியாளர்கள் செய்யாமல் ஒரு சேவை மனப்பானமையாக செய்யவேண்டும். இதை சம்பந்தப்பட்ட நிர்வாகிகளும் கண்கானித்து தரமான சாலை அமைக்க வகைசெய்யுமாறு அதிரை பிறை சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
நமது செய்தியாளர்: மணிச்சுடர் சாகுல் ஹமீது


1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது