தஞ்சையில் சீல் வைத்த வாக்குப்பதிவு எந்திரம் திறப்பு!

2
தஞ்சை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட நாஞ்சிக்கோட்டை அருகே மறியல் கிராமத்தில் வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு தேர்தல் முடிவடைந்ததும், அனைத்து கட்சி முகவர்கள் முன்னிலையில் வாக்கு எந்திரம் சீல் வைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து அங்கு வந்த மண்டல அலுவலர் மணிகண்டன், வாக்குப்பதிவு எந்திரத்தின் சீலை திடீரென உடைத்தார். இதனை அந்த வழியாக சென்ற முகவர் ஒருவர் பார்த்துவிட்டு, மற்ற வாக்குச்சாவடிகளில் இருந்த திமுகவினருக்கும், திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலுவுக்கு தகவல் கொடுத்துள்ளார்.

அவர்கள் மறியல் கிராமத்தில் உள்ள சம்மபந்தப்பட்ட வாக்குச்சாவடிக்கு விரைந்தனர். டி.ஆர்.பாலு வாக்குப்பதிவு எந்திரத்தை பார்வையிட்டார். அப்போது அங்கு வந்த டி.எஸ்.பி.சுகுமாருக்கும், திமுகவினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. 

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய டி.ஆர்.பாலு, அனைத்து முகவர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு எந்திரம் சீல் வைக்கப்பட்ட பிறகு ஒரு பெட்டி ஜோர்னல் ஆபீசல் திறந்திருக்கிறார். இதுபோன்ற செயல் தவறு. எதற்காக திறந்தார் என்று தெரியவில்லை. ஆகையால் மறுவாக்குப்பதிவு வேண்டும் என்று நாங்கள் கேட்கப்போகிறோம் என்றார்.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் டி.ஆர்.பாலு புகார் அளித்துள்ளார். 


Source: நக்கீரன்

Post a Comment

2Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

  1. ஓட்டு பெட்டிக்கு சீல் வைத்த பின் ஓட்டு பெட்டியே திறந்து பார்த்தானே அவன் யார்?
    எந்த ஊரு.
    எந்த கட்சிக்காரன்.
    ஏன் ஓட்டுபெட்டியே திறந்தான்.
    யாருடையா தைரியத்தில் இதை செய்தான்.
    ஓட்டு பெட்டியே பாதுகாக்க வேண்டிய காவலாளி வேலை நேரத்தில் எங்கே சென்றார்.
    ஓட்டு பெட்டிக்கு சீல் வைத்த பின் ஓட்டு பெட்டியே திறந்து பார்த்தானே அவனுடைய முழு விபரத்தையும் photo வுடன் செய்திதாளில் வெளிட வேண்டும்.

    ReplyDelete
  2. ஓட்டு பெட்டிக்கு சீல் வைத்த பின் ஓட்டு பெட்டியே திறந்து பார்த்தானே அவன் யார்?
    எந்த ஊரு.
    எந்த கட்சிக்காரன்.
    ஏன் ஓட்டுபெட்டியே திறந்தான்.
    யாருடையா தைரியத்தில் இதை செய்தான்.
    ஓட்டு பெட்டியே பாதுகாக்க வேண்டிய காவலாளி வேலை நேரத்தில் எங்கே சென்றார்.
    ஓட்டு பெட்டிக்கு சீல் வைத்த பின் ஓட்டு பெட்டியே திறந்து பார்த்தானே அவனுடைய முழு விபரத்தையும் photo வுடன் செய்திதாளில் வெளிட வேண்டும்.

    ReplyDelete
Post a Comment