அதிரையில் ஓய்ந்தது தேர்தல் சீசன், களைக்கட்டியது கல்யாண சீசன்

Editorial
0
ஓய்ந்தது தேர்தல் சீசன்:
கடந்த ஒன்றரை மாதங்களாக நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரங்கள் நமதூரில் களைக்கட்டியிருந்தது. தஞ்சை தொகுதியில் 5 முனைப் போட்டி நிலவியதால் பல்வேறு கட்சி தலைவர்கள் அதிரைக்கு வலம் வந்தவாறு இருந்தனர். தினமும் பேருந்து நிலையம், வண்டிப்பேட்டை, கடைத்தெரு போன்ற பகுதிகளில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டங்கள், தெருமுனைப் பிரச்சாரங்கள் ஒலிப்பெருக்கி பிராச்சாரங்கள், இணையதளங்கள் மூலம் பிரச்சாரங்கள் மற்றும் நேரில் காணமுடியாத தலைவர்கள் எல்லாம் நம் வீதிக்கு வந்து நம்மிடம் வாக்குகள் சேகரித்தனர்.

எனவே கடந்த சில நாட்களாக கோடை வெயிலுக்கு ஈடு கொடுக்கும் வகையில் தேர்தல் பிரச்சாரங்கள் சூடாகவே நடைப்பெற்றன. இந்த தேர்தல் நம் ஊரில் ஒரு திருவிழா போலவே நடைப்பெற்றது எனலாம். டீ கடை முதல் டில்லி பாராளாமன்றம் வரை யாரை பார்த்தாலும் தேர்தல் பேச்சு. இந்த தேர்தல் நேற்று அதிரையில் வாக்குப்பதிவுடன் நிறைவடைந்தது. மக்கள் ஆர்வமுடன் வந்து தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றினர். ஆங்காங்கே சில சலசலப்புகள் சச்சரவுகள் காணப்பட்டாலும், எந்தவொரு அசம்பாவிதமும் இன்றி அதிரையில் அமைதியாக நடந்து முடிந்தது இந்த நாடாளுமன்றத் தேர்தல்.

களைக்கட்டியது கல்யாண சீசன்:

மே மாதம் என்றால் நமதூர் மக்களுக்கு முதலில் நினைவுக்கு வருவது கல்யாணம் தான். ஆம் மாதத்திற்க்கு 200க்கும் மேற்ப்பட்ட கல்யாணங்கள் இந்த மாதம் நடைப்பெறும். கோடை விடுமுறைக்கு சென்னையிருந்து அதிரைக்கு சொந்தபந்தங்கலெல்லாம் வருவார்கள். எனவே உறவினர்கள் சூழ நம் வீட்டு திருமணத்தை நடத்திவிடலாம் என எண்ணுபவர்களுக்கு முதல் சாய்ஸ் மே மாதம். இம்மாதம் வெயிலுக்கு நிழர்க்குடை அமைத்தார் போல் தெருவுக்கு குறைந்தது நான்கு பந்தல்களாவது இருக்கும். 

பெண்களும் கூட்டமாக உறவினர்கள் மற்றும் பழக்கமானவர்களை திருமணத்துக்கு மாலை கூப்பாட்டிர்க்கு செல்ல துவங்கிவிட்டனர். எனவெ கடந்த வருடங்களைக் போல் இந்த வருடமும் கல்யாண சீசன் களைக்கட்டியது.

ஆக்கம்: நூருல் இப்னு ஜஹபர் அலி(அதிரை பிறை)  

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)