விபத்தோ, எமர்ஜென்ஸியோ.. உடனே நாம் அழைக்கும் எண் 108! அழைத்ததும் உதவிக்கு ஓடி வரும் ஆம்புலன்ஸ். அதே போல இப்போது இன்னொரு எண்ணை, அவசரகால சிகிச்சை மற்றும் மேலாண்மை நிறுவனமான 'GVK-EMRI’ உடன் இணைந்து அறிமுகப்படுத்தியுள்ளது தமிழக அரசு.
உடல்நிலை சரியில்லையா? வயிற்று வலி, தலை வலியா? காய்ச்சலா? 104 - என்ற எண்ணுக்கு அழைத்தால், நமக்கு தேவையான மருத்துவ அறிவுரைகள், தகவல்கள், ஆலோச...னைகளை சம்பந்தப்பட்ட மருத்துவரிடம் பெற்றுத் தருவார்கள்.
மேலும், ரத்தம் தேவைப்படுபவர்களுக்கு அருகே எந்த ரத்த வங்கி இருக்கிறது என்ற தகவல், அருகிலுள்ள மருத்துவமனை மற்றும் சிடி, எம்.ஆர்.ஐ ஸ்கேன் சென்டர்கள், புதிய நோய்த்தொற்று பற்றிய தகவல்கள் மற்றும் மக்களுக்குத் தேவையான மருத்துவத் தகவல்கள் என அனைத்தையும் இலவசமாக வழங்குகிறது இந்த 104 சேவை.
மேலும் 108-ஐ அழைத்து ஆம்புலன்ஸ் வரத் தாமதமானால், பாதிக்கப்பட்டவருக்கு அளிக்க வேண்டிய முதல் உதவி பற்றியும் தகவல் கிடைக்கும். 24 மணி நேரமும் இயங்கும் இந்த சேவைக்கு தற்போது நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது